பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

சார்புடைய கலை, பண்பாடுகளை விளக்கும் வகையில் அமைந்த கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள், குருத்துவாரங்கள், புத்த விஹார்கள், ஜைனக்கோயில்; இத்தனை இனங்களும் மதங்களும் மொழிகளும் கலைகளும் பண்பாடுகளும் ஒன்றாக இணைந்து இயங்குவதைக் கண்டு அதிசயித்தேன். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணமாக அமைந்திருப்பது ஆன்மீக உணர்வு எனும் ஆழமான வேரை இந்தியா கொண்டிருப்பதுதான் என்பதை என்னால் நன்கு உணர முடிந்தது. இந்த வகையில் சின்னஞ்சிறு நாடான ஹவாய்த் தீவு அல்ல, இந்தியாவே உலகத்துக்கு வழிகாட்டி நாடாக விளங்கி வருகிறது. பல் சமய, இன, மொழி, பண்பாட்டு ஒருங்கிணைவு எப்படியமைய வேண்டும் என்பதற்கு இந்தியாவே உலகத்துக்கு உத்வேக மூட்டி வருகிறது,” என உணர்ச்சி பூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் ஒரு குட்டிப் பிரசங்கமே நிகழ்த்தி விட்டார். இந்தியாவைப் பற்றி அப்பெண்மணி கொண்டிருந்த கருத்தும் உணர்வும் என் நெஞ்சத்தைத் தொட்டது. இந்தியாவைப் பற்றி அந்நிய நாட்டுப் பெண்மணி மனந்திறந்து கூறிய பாராட்டுரையால் நெகிழ்ந்து போன என் துணைவியாரின் கண்கள் பனித்து விட்டன. இந்தியாபற்றி ஸ்வீடன் நாட்டுப் பெண்மணி கொண்டிருந்த எண்ணம் இந்தியாவைப் பற்றி உலகம் கொண்டுள்ள உணர்வையே முழுமையாகப் பிரதிபலித்தது என்பதில் ஐயமில்லை.

உலக அரங்கில் இந்திய
பெருமைக் குலைவு

பல்வேறு மதங்களும் இனங்களும் மொழிகளும் பண்பாடுகளும் சகிப்புணர்வோடு ஒத்து வாழும் ஒருங்கிணைவுக்கு உலகத்துக்கே வழிகாட்டும் ஒளி விளக்காக அமைந்துள்ள இந்தியப் பெருமையைக் குலைக்கும் வகையில் சிலரது நடவடிக்கைகள் அமைந்து வருவது ஸ்வீடன் நாட்டுப் பெண்மணி போன்ற உலக மக்கள்