பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

இரத்தக் கொதிப்பு போன்ற நோய்கள் சீரடைகின்றன, அல்லது குறைந்து விடுகின்றன.

ஏனெனில், நோன்பு நாட்களில் உண்ணும் உணவின் அளவு வெகுவாகக் குறைவதால், ‘ஹார்மோன்’ சுரப்பதும் குறையவே செய்கிறது. இதனால் இரத்தக் கொதிப்பும் மட்டுப்பட நேர்கின்றது.

உடல் உறுப்புகளில் ஓய்வும்
பெறும் புத்துணர்வும்

தொடர்ந்து முப்பது நாட்கள் நோன்பு நோற்பதால், உடலில் ஜீரண உறுப்புகளெல்லாம் நன்கு ஒய்வு பெற வாய்ப்பேற்படுகின்றது. நோன்பு முடிந்த பின்னர் இவ்வுறுப்புகளெல்லாம் புத்துணர்வோடு இயங்க இயலுகிறது.

மிக இளமைதொட்டே ஆண், பெண் அனைவருக்கம் ரமளான் மாத நோன்பு கட்டாயமானாலும் நோயாளிகள், பிரயாணிகள், கர்ப்பிணிகள், பால் குடிக்கும் குழந்தையுடைய தாய்மார்கள், உடல் நலிவடைந்த வயோதிகர் ஆகியோருக்கு இஸ்லாம் நோன்பினின்றும் விலக்களித்துள்ளது.

சமய அடிப்படையிலும் உளவியல், மருத்துவ அடிப்படையிலும் மிகுபயன் விளைவிக்க வல்ல ரமளான் மாத நோன்பு ஒவ்வொருவருக்கும் ஆன்மீக பலத்தையும் உடல் வலுவையும் பெருக்கும் அருமருந்தாக அமைந்துள்ளது.

நன்றி : தினமணி