பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இஸ்லாமியப் புத்தாண்டின்
புனிதமிகு முஹர்ரம்


இஸ்லாமியப் புத்தாண்டின் முதல் மாதமாக அமைந்திருப்பது புனிதமிகு ‘முஹர்ரம்’ மாதமாகும். இஸ்லாமிய மாதங்கள் பன்னிரண்டில் முதல்மாதமாக முஹர்ரமும் இறுதி மாதமாக துல்ஹஜ்ஜும் அமைந்துள்ளன.

‘ஹிஜ்ரி’ ஆண்டு, நபிகள் நாயகம் முஹம்மது நபி (சல்) அவர்களின் வாழ்வில் நடந்த மிக முக்கியமான நிகழ்ச்சி யொன்றை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டதாகும்.

இஸ்லாமிய நெறி நிலைபெறுவதற்குப் பன்னெடுங் காலத்திற்கு முன்பிருந்தே, அராபியர்கள் தங்கள் சமுதாயப் பொது வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டு, கணக்கிட்டு, அதற்கு வெவ்வேறு பெய ரிட்டு அழைத்து வந்தனர். ‘அனுமதி ஆண்டு’ என்றும் ‘நில அசைவு ஆண்டு’ என்றும் ‘யானை ஆண்டு’ என்றும் பல ஆண்டுக் கணக்குகளை அவர்கள் வைத்திருந்தனர். இவ்வாறு பல்வேறு பெயர்களில் ஆண்டுக் கணக்குகள் அராபியர்களிடம் நிலவி வந்தபோதிலும் இஸ்லாம் நிலை பெறத் துவங்கி, மக்களிடையே நன்கு பரவி அழுத்தம் பெறத் தொடங்கிய கால கட்டத்திலேயே, இஸ்லாமி