பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

துணிந்த நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் செயலாக இது அமைந்துள்ளது. அல்லாஹ்வின் பெயரால் குர்பானி தரப்படும் உயிரின் இறைச்சியோ இரத்தமோ இறைவனைச் சென்றடைவதில்லை. மக்களின் இறைபக்தியும், தியாக உணர்வும் இறைவனுக்குக் கீழ்ப் படிந்து நடக்கும் தன்மையும் மட்டுமே இறைவனைப் போய்ச் சேருகின்றன.

தியாகப் பிழம்பாகும் ஹாஜிமார்

இஸ்லாம் விதித்த நியமப்படி ஒழுகித் தன்மை தியாகப் பிழம்பாக உருமாற்றிக் கொள்ளும் ஹாஜி, தான் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களையெல்லாம் தியாக வேள்வியில் போட்டு பொசுக்கியவராகப் புதுவாழ்வு பெறுகிறார். இதைப்பற்றிப் பெருமானார்.

“எவர் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்து தீய சொல் பேசாமலும் தீய செயல் செய்யாமலும் திரும்புவாரோ அவர் தன் தாயின் வயிற்றிலிருந்து அன்று பிறந்த பாலகனைப் போன்று பாவமற்றவராகத் திரும்புகிறார்.” என்று கூறியுள்ளார்.

இவ்வாறு ‘ஈதுல் அள்ஹா’ எனும் தியாகத் திருநாளும் ஹஜ் பெரு நாளும் இறை நெறியில் தியாக வாழ்வு வாழ இறையுணர்வு பொங்கும் இனிய வாழ்வு பெற வழி காட்டும் நாளாக அமைகிறது.

நன்றி : தினமணி