பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

கலீஃபா உமர் (ரலி) அவர்கள், பெருமானார் மக்காவி லிருந்து மதினா நோக்கி, ‘ஹிஜ்ரத்’ செய்த நிகழ்ச்சி நடந்த நாளை அடிப்படையாகக் கொண்டு ‘ஹிஜ்ரி’ ஆண்டு துவங்கப்பட்டது.

ஆண்டின் முதல் மாதமாக முஹ்ரம்
ஆன காரணம்

‘ஹிஜ்ரா’ என்ற ‘சொல்லுக்கு இடம் மாறிச் செல்லுதல்’ என்பது பொருளாகும். பெருமானார் மக்கமாநகரிலிருந்து மதினமாநகர் நோக்கி இடம் மாறிச் சென்றது. ‘ரபியுல் அவ்வல்’ மாதத்திலாகும். அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மக்கமா நகரிலிருந்து ரபியுல் அவ்வல் மாதம் முதல் தேதியன்று புறப்பட்டு சரியாகப் பன்னிரண்டாம் தேதி வெள்ளிக்கிழமை மதினமா நகருள் புகுந்தார்கள். ஆனால் ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் பெருமானார் புறப்பட்ட ரபியுல் அவ்வல் மாதம் முதல் தேதியிலிருந்தோ அல்லது மதினமா நகர் போய்ச் சேர்ந்த ரபியுல் அவ்வல் பன்னிரண்டாம் தேதியிலிருந்தோ தொடங்காமல், முன்பாகவுள்ள 69 நாட்களைப் பின்னுக்குத் தள்ளி ‘முஹர்ரம்’ முதல் நாளை, ஹிஜ்ரி ஆண்டின் துவக்க நாளாக, வருடப் பிறப்பு நாளாகக் கொண்டதற்குச் சிறப்பான காரணம் உண்டு.

உழைப்பை உயர்த்திப் போற்றுவது இஸ்லாம். ஒவ்வொரு மனிதனும் கடுமையாக உழைத்தே ஊதியம் தேடி, தம் வாழ்வை நடத்தவேண்டும் எனப் போதித்தவர் பெருமானார் அவர்கள். அஃது உடல் உழைப்பாகவோ மன உழைப்பாகவோ இருக்கலாம். அக்கால அரபு மக்களின் முக்கியத் தொழிலாக அமைந்திருந்தது வாணிபத் தொழிலாகும்.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஐந்தாவது இறுதிக் கடமையான ஹஜ் கடமையை இனிது நிறை