பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

செங்கடல் பிளந்த நாள்

முஹர்ரம் மாதம் வரலாற்றுச் சிறப்புமிக்க மாதமாக வும் அமைந்துள்ளது. முற்காலத்தில் எகிப்து நாட்டை ‘பிர் அவ்ன்’ (ராம்செஸ்) எனும் கொடுங்கோலன் ஆண்டு வந்தான். மமதையும் செறுக்குமே உருவாயமைந்தவன். தன்னைத் தவிர்த்து வேறு இறைவன் இல்லை என்றும் மக்கள் தன்னையே கடவுளாகக் கருதி வணங்க வேண்டும் என்றும் கட்டளையிட்டான். இதனை ஏற்கத் தயங்கியவர் களைக் கொடுமையாக நடத்தி வந்தான். வணங்க மறுத்தவர்களைக் கொன்று குவித்தான்.

அச்சமயத்தில் இறைதூதரான மூஸா (அலை) (மோசஸ்) அவர்கள் ‘மனிதர்களையும் மற்ற உயிர் வர்க்கங்களையும் உலகையும் படைத்துக் காப்பவன் இறைவனாகிய அல்லாஹ்வே’ என்பதை மக்களிடையே பிரச்சாரம் செய்து வந்தார்கள். இதைக் கண்டு வெகுண்ட கொடுங்கோலன் ‘பிர்அவ்ன்’, தன்னையே கடவுளாக ஏற்று வணங்குமாறு மூஸா நபியைப் பணித்தான். அரசனின் ஆணையை அடியோடு மறுத்த இறைத்தூதர் மூஸா (அலை) அவர்கள், இறைவன் ஒருவனே என்றும், அவனே வணக்கத்திற்குரியவன் என்றும் இறைவனால் படைக்கப்பட்ட எதுவும், அவன் மன்னனாக இருந்தாலும் வணங்கு தற்குரியவன் அல்லவே அல்ல என்றும் கூறி, ஒரே இறை வனாகிய அல்லாஹ்வை வணங்கி உய்தி பெறுமாறு அறிவுறுத்தினார்.

தன்னை வணங்கிப் பணிய மறுத்ததோடு தனக்கு இறைவனைப் பற்றி அறிவுரை கூறிய மூஸா (அலை) அவர்கள் மீது அளவிலா கோபடைந்தான் பிர்அவ்ன். இறைதூதர் மூஸா அவர்களையும் அவரது சமூகத்தைச் சேர்ந்த பனு இஸ்ராயில் கூட்டத்தாரையும் தன் படைகளை ஏவி, அழிக்க ஆணையிட்டான். கொடுங்கோல் மன்னன்