பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

பிர்அவ்னின் கொடிய பிடியிலிருந்து விடுபட விரும்பிய இறை தூதர் மூஸா (அலை) அவர்களும் அவர் தம் கூட்டத்தினரும் இறைவனின் விருப்பப்படி எகிப்தை விட்டு வெளியேறிச் சென்றனர். எதிரே செங்கடல் குறுக்கிட்டது. இறை ஆணைப்படி செங்கடல் பிளந்து வழி விட்டது. மூஸா நபியையும் அவரது கூட்டத்தினரையும் பிர் அவ்னின் படைகள் துரத்திச் சென்றனர். மூஸா நபியும் அவரைச் சார்ந்த இறையடியார்களும் அக்கரை சேர்ந்தவுடன் பிளந்து நின்ற கடல் மீண்டும் ஒன்றிணைந்தது. பிளந்து நின்ற செங்கடலுள் துரத்திச் சென்ற கொடுங்கோலன் பிர்அவ்னும் அவனது படையினரும் செங்கடலுள் மூழ்கி மாண்டனர். இந்நிகழ்ச்சி நிகழ்ந்த நாள் முஹர்ரம் பத்தாம் நாள் ஆகும்.

‘ஆஸுரா நாள்’

அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மதினா நகர் வந்த புதிதில் பனீ இஸ்ராயில் கூட்டத்தைச் சேர்ந்த யூதர்கள் முஹர்ரம் 10 ஆம் நாள் நோன்பு நோற்றிருப்பதைக் கண்டு, அதற்கான காரணத்தை வினவினார்.

கொடுங்கோல் மன்னன் பிர்அவ்னையும் அவனது படையினரையும் செங்கடலில் மூழ்கடித்து, இறை தூதர் மூஸா அவர்களையும் அவரது கூட்டத்தாரையும் காப்பாற்றிய நாள் என்பதால், இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக யூத சமூகத்தவர்கள் முஹர்ரம் பத்தாம் நாளை ‘ஆஸூரா’ தினமாக அனுசரிப்பதாக அண்ணலாரிடம் கூறினார்கள்.

இதைக் கேட்ட பெருமானார் அவர்கள் அவ்விதமானால் நானும் மற்ற முஸ்லிம்களும் மற்றவர்களைவிட மூஸா நபி அவர்களோடு மிக மிக அதிகம் நெருக்கமுடைய வர்கள் என்ற வகையில், இந்த ‘ஆஸூரா’ நோன்பை ஆண்டுதோறும் கடைப்பிடிக்குமாறு முஸ்லிம்களைப்