பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

இவ்வுயர் பண்பை மறந்துவிட்டதால் அல்லது பேணி நடக்க விழையாத காரணத்தால் எத்தனையோ இடர்ப்பாடுகள் இன்றைய வாழ்வில் தலைதூக்கி, அமைதியின்மைக்கும் கலவரச் சூழலுக்கும் காரணமாகின்றன.

எந்தவொரு சமய, இன, வகுப்பு, மொழி மக்களா யினும் அவர்கள் இணக்கத்தோடும் ஒற்றுமையோடும் ஒத்திணங்கி வாழ வேண்டும் என்பதே இஸ்லாத்தின் அடிப்படையாகும்.

அது மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து மதங்களும் அவற்றின் வேதங்களும் இறைவனால் வழங்கப் பட்டவையே என்பதையும் அவை அனைத்தையும் முஸ்லிம்கள் மதிக்க வேண்டும் என்பதையும் இஸ்லாமிய அடித்தளப் பண்புகளாக வற்புறுத்தப்படுகின்றன. இதற்கு மாறு செய்வோர் பாவம் செய்தவர்களாவர் என இஸ்லாம் தெளிவாகக் கூறி எச்சரிக்கிறது.

அடிநாள் தொட்டே
சகிப்புணர்வு

பெருமானாரின் பெருவாழ்வில் அடிநாள் தொட்டு அரசோச்சி வந்த பண்பு சகிப்புணர்வாகும். சகிப்புத் தன்மைக்கோர் இலக்கணமாக ஆரம்ப காலம் தொட்டே விளங்கியவர் என்பதை அவரது வரலாற்றுச் சுவட்டில் தெளிவாகக் கண்டுணர முடிகிறது.

ஹிரா குகையில் வானவர் மூலம் இறைநெறி பெற்ற பெருமானார், அதைப் பல்வேறு இடர்ப்பாடுகளுக்கிடையே மக்காவில் நண்பர்களிடையே இரகசியமாகப் பரப்பி வந்தார். மதினா நகர் வந்த பிறகே பெருமானார் பகிங்கரமாகப் பிரச்சாரம் செய்யலானார்.

நபிகள் நாயகம்(சல்) மதினா வரு முன்னர் அந்நகர மக்களில் விரல் விட்டு எண்ணத்தக்க ஒரு சிலரே