பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77

அவர்தம் சமயச்சூழலுக்குள் தாங்கள் தங்கள் வேத நியதிப்படி அவ்வச் சமயத் தலைவர்களே தீர்ப்பு வழங்கிக் கொள்ள பூரண உரிமை பெற்றவர்களாவர் என அச்சட்டம் விளக்கிக் கூறுகிறது.

இம்மதினா நகர அரசமைப்புச் சட்டத்தில் காணும் மற்றொரு சிறப்பம்சம் சமயப் பாதுகாப்பபு மட்டுமின்றி சமூகப் பாதுகாப்புமாகும்.

ஒரு சமூகத்தைச் சார்ந்தவர்களிடையே ஏற்படும் பொருளாதாரப் பிரச்சினைகளை அச்சமூகத்தைச் சார்ந்த மக்கள் அனைவரும் தங்கள் பிரச்சினையாக்க கருதித் தீர்த்துக் கொள்ளக் கடமைப்பட்டவர்களாவர் என விதித் திருப்பதாகும்.

இன்றைய ஐரோப்பிய நாடுகளில் காணும் சமூகப் பாதுகாப்பு உத்திரவாதச் சட்டங்களுக்கு அன்றே முன் னோடிச் சட்டம் உருவாக்கப்பட்டதெனலாம்.

இவ்வாறு முஸ்லிம், கிறிஸ்துவ யூத சமயங்களைச் சார்ந்த மக்கள் சிறுபான்மை அல்லது பெரும்பான்மை என்ற எண்ணிக்கை பேதமின்றி ஆழ்ந்த சகிப்புணர்வுடன் எவ்விதப் பாகுபாடுமின்றி, முழுச் சுதந்திரத்துடன் தங்கள் சமய அடிப்படையில் வாழவும், தங்கள் மத நம்பிக்கையின்படி தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவும் வழிவகை ஏற்பட்டது.

இன்றைய மக்களும், அரசுகளும் ஏற்றிப் போற்றிப் பின்பற்றத்தக்க வகையில் அன்றே பல்வேறு சமய மக்களிடையே சகிப்புணர்வையும், ஒற்றுமையையும், ஒருங்குணர்வையும் சட்டப்பூர்வமாக நிலைநாட்டிய பெருமை பெருமானாரையே சாரும்.

நன்றி: தினமணி