பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

ருந்தது. அக்கட்டுரையைப் படிப்பதற்கு முன் இஸ்லாம் மதம் பற்றித் தவறான எண்ணம் கொண்டிருந்தேன். இந்திய சமயங்களை அழிக்க வந்த சமயம் என்றே எண்ணியிருந்தேன். பிற மதங்களை மதிப்பதே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை என்பதை குர்ரானிலிருந்து எடுத்துக்காட்டுகள் தருவதன் மூலமாகவே சிறப்பாக விளக்கியிருந்தார். என்னுள் இருந்த வெறுப்பு விலகியது மட்டுமல்ல, இஸ்லாம் மதம் மீது மதிப்பும் ஏற்பட்டு விட்டது. இஸ்லாம் கொள்கை வழி நடப்பதன் மூலமே மத சமூக நிலைமை நிலைபெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது”.

பி. பெருமாள்,
சென்னை - 107

என்ற முகவரியிலிருந்து ஒரு வாசகர் எழுதியிருந்தார். அவ்வாசகரின் கடிதம் பல உண்மைகளை வெளிப்படுத்தியது. இஸ்லாத்தைப் பற்றி அறியும் ஆர்வம் இன்றையச் சூழலில் பிற சமய அன்பர்களிடம் மிகுந்துள்ளது. அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் இஸ்லாமிய உணர்வுகளையும் கருத்துகளையும் தத்துவ நுட்பங்களை யும் எளிமையாக எடுத்து விளக்கினால் அவற்றைப் படிக்கவும் மனத்துள் இருத்திக் கொள்ளவும் அவை பற்றி ஆழச் சிந்திக்கவும் பல உள்ளங்கள் தயாராக உள்ளன. இதன் மூலம் இஸ்லாத்தைச் சரிவர அறியாமலே அதன் மீது தவறான கண்ணோட்டம் செலுத்தி வருபவர்கள் தங்கள் தவறான உணர்வுகளைத் திருத்திக் கொள்ளவும் உண்மையான இஸ்லாமியக் கருத்துகளைப் பெற்றுச் சிந்திக்கவும் அருமையான வாய்ப்பு உருவாகிறது. இதனால், இஸ்லாத்தைப் பற்றிய, அம் மார்க்கத்தைப் பேணி வரும் முஸ்லிம்களைப் பற்றி, தவறான உணர்வுகள் முற்றாகத் துடைத் தெறியப்படும் இனிய வாய்ப்பும் சூழலும் ஏற்படுகிறது. பல்வேறு சமயங்களைச் சார்ந்தவர்கள் முஸ்லிம்களோடு மனநெருக்கம் கொள்ளவும் வழி பிறக்கிறது.