உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருமூச்சு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமூச்சு அந்தக் காட்சியைக் காவியமாக்கித் தருகிறது அந்தப் பெருமூச்சு! கண்டவர்கள் பெருமூச்சு விடுகிறார்கள். காணாத வர்கள் கண்டவர் சொல்லக் கேட்டுப் பெருமூச்சு விடுகிறார்கள். தென்னாட்டு அரசியல் சரித்திரம் காணாத, மகத் தான் சாதனை மாநாடு! பல நாளைய உழைப்பின் பலன், மாநாடு! பாடுபட்டவர்க்குக் கிடைத்த பரிசு மாநாடு! - அதனால்தான், மாநாட்டை நடத்தியவர்கள் மாநாட்டைக் கண்டவர்- ஆனந்தப் பெருமூச்சு விடு கிறார்கள். அந்தப் பெருமூச்சு - அடுத்துவரும் உணர்ச்சி மூச்சுக்களுக்கு அடிப்பீடமாக அமையட்டும்! அந்த மூச்சு- சோகத்தின் விளைவல்ல ! பொறுமையின் நிழலல்ல! பூரிப்பின் முழக்கம்! எடுத்த காரியத்தை முடித்தோம் என்ற எக்களிப்பின் அடையாளம்; எடுக்க வேண்டிய காரியங்கள் பல உள்ளன என்பதை ஒலித் துக்காட்டும் பேரிகை! 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/10&oldid=1706249" இலிருந்து மீள்விக்கப்பட்டது