உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருமூச்சு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி அறிவுப் பிரச்சாரத்திற்கு, இயக்கம் கண்டுபிடித் துள்ள புதிய முறையாம் ஓவியக் கண்காட்சி ஒருபர்லாங் நீளத்திற்கு அமையப்பெற்று -சமூக பொருளாதார. அரசியல் விஞ்ஞான தத்துவங்களை அள்ளியள்ளி வீசி ஆயிரமாயிரம் கருத்துக் குவியல்களை எடுத்து நீட்டி ஆக்க வேலைக்கோர் எடுத்துக் காட்டாக எழுந்து நின்றதை முழக்குகிறது, அந்தப் பெருமூச்சு! நான்கு நாட்கள் மாநாடு! இரவு பகல்; நாடகம்- பேச்சு- இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள். வசதிக் குறைவு - இடக் குறைவு - இத்தனை இடையூறு களுக்கிடையே ஆர்வமிழக்காத காளையர், அவர்களை யெல்லாம் வரவேற்று, திறமையுடனாற்றிய பணிகள், இவைகளை யெல்லாம் விளங்க வைக்கிறது அந்தப் பெரு மூச்சு! முன்னணி வீரர்கள், சேர, சோழ, பாண்டிய வீரர்களை நினைவுறுத்தும் தோரணையில் போர்ப்பரணி பாடிட, அதைக் கேட்டிருந்த இருலட்சத்தார் இன உணர்ச்சி வெள்ளத்தில் இரண்டறக் கலந்துவிட, அந்தக் காணமுடியாத காட்சியைக் கவிதையாக்கிவிடு கிறது அந்தப் பெருமூச்சு! 66 "கண்ணீர்த் துளிகளே! நாட்டின் கண்மணிகளே! என்று விம்மும் குரலில் தழுதழுத்த வார்த்தைகளை வீரர் அண்ணா வீசியபோது, மேடையிலிருந்த தம்பி மார்கள் கலங்கினர். பந்தலில் இருந்தோர் மெய் சிலிர்த் தனர். T

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/9&oldid=1706248" இலிருந்து மீள்விக்கப்பட்டது