உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருமூச்சு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமூச்சு . முடியாது. கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் தாம் ரஷியா சென்று நேரிற்கண்டவைகளை வில்லுப் பாட் டாக அமைத்து அழகாகப் பாடி வருகின்றார். அவ் வில்லுப் பாட்டின் மூலம், ரஷியர்கள் தங்கள் நாட்டை எவ்வண்ணம் நடத்துகின்றனர்? ரஷ்யா இன்று எத் தகைய உன்னத நிலையை அடைந்திருக்கிறது என்பதை நம் மக்கள் அறிந்து கொள்ள முடிகிறது. க இதைக் கண்டு, காங்கிரஸ் மந்திரிகள் காற்றினும் கடுகி ஓட்டம்பிடிப்பதென்றால், இதனை என்னென்பது? ஏன் இந்த மந்திரிகள் ஓட்டம் பிடிக்க வேண்டும்? ரஷ்யாவிலே ஒழுங்காக மழை பொழிவதில்லை. எனவே, அவர்கள் மழையை மதிக்காமல் தங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களை விளைவிக்கும் வித்தையைக் கண்டு பிடித்து வைத்துக் கொண்டிருக்கின்றனர்! அத னால் அவர்கள் பஞ்சங் கண்டு அஞ்சுவதில்லை. அந்த நாட்டில் எவ்வளவு கொடுமையான போர் நெருக்கடி காலத்திலும் உணவு நெருக்கடி தோன்றவில்லை. மேலும் அங்கே மக்கள் வாழ்க்கை வளம் நிறைந்ததாக ஆக்கப் பட்டிருக்கிறது. வாழ்க்கை துன்பம் என்பது அங்கு மருந்துக்கும் கிடையாது. இதனால் அங்குத் திருட்டு, சூது, வஞ்சகம், கொலை போன்ற குற்றங்கள் நடை பெறுவது அரிது. மக்கள் எத்தேவையுமற்ற வகையில் எல்லா வசதிகளும் உடையவர்களாக வாழ்வதால் அங்கு அரசாங்கத்துக்கு எதிர்ப்புமில்லை. மக்களிடை எரியுணர்ச்சியுமில்லை. அமைதியும் சாந்தமும் மகிழ்ச்சி 16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/18&oldid=1706258" இலிருந்து மீள்விக்கப்பட்டது