பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 100 – கயலெழுதிய விமய நெற்றியி னயலெழுதிய புலியும் வில்லும் (ஆய்ச்சி) என்னுஞ் சிலப்பதிகாரத்துப் புலியும் வில்லு மென்றது அவற்றை யுடைய அரசரை என அரும்பத வுரைகாரர் கூறுதல் காண்க. இத்திரையன் ஆளும் இவ்வமயம் இவ்வாசிரிய ரானே பாடப்பட்ட திருமாவளவன் இளையனுக இருங் தான் எனக் கருதல் பொருந்தும். இச்செய்தியை அவனைக் "கொடுவரிக் குருளே கூட்டில் வளர்ந்தாங்கு” என இவரே பாடுதலான் உய்த்துணரலாகும். இதன்கட் சோழனைப் புலிக் குட்டியோடுவமித்தது கண்டு தெளிக. இவ்வாறே இப்புலவர் பெருமான் உண்மை வரலாறுகளை அழகு பொலிய அணிந்துரைக்கும் சிறப்பு அறிஞர்க் கெல்லாம் வியப்பும் உவப்பும் தருவ தாகும். உரைகாரர் வயமானுடைய கொடுவரிக் குருளே " எனக் கொண்டு சிங்கத்தினுடைய வண்ங்த வரிகளையுடைய குருளே " என வுரைத்தார். சிங்கத் திற்குக் கொடுவரியின்மை அவர் கினைந்திலர். கொடுவரி யிரும்புலி " (குறுங்-815) (அகம்-37,9:) பல்லிடத்தும் வருதல் காண்க. பகைவர் கடிமதி லெறிந்து குடுமி கொள்ளும் வென்றியல்லது - பகைவர் காவன் மதில்களே யழித்து அங்காட்டு முடியைக் கொள்ளும் வென்றியை யல்லாமல்.