பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 20 — படர்தற்கண் இடையூறுண்டோ எனவும் திரையன அடையும் வரையும் உண்டு செல்லற் கியையுமோ எனவும் ஐய நிகழாது பரிகளித்து அவன்பாற் சேறற் கண்ணேயுள்ள உணவும் இன்பமும் பிறவும் அறிவு றுத்தி ஆற்றுப்படுப்பது, மேல் முதற்கண் செல்வழி யில் ஆறலே கள்வரில்லாமை கூறுகின்ருர் தொல்காப் பியனர் அச்சத்திற்கு ஏதுக்கூறிய இடத்து, 'அணங்கே விலங்கே கள்வர்தம் மிறையெனப் பிணங்கள் சாலா வச்ச நான்கே" (மெய்ப். 8) எனக் கூறினர். இங்குக் கூறிய நான்கனுள் இறை அல்லது கடிந்த அறம்புரி செங்கோலுடைய னென்றும் அவனது கடியுடை வியன் புலமென்றுங் கூறி இறையான் அஞ்சலாகாமை காட்டி அவன் அறம் புரிதலால் அணங்காலும் விலங்காலும் அச்சம் நிகழாதென்றும், அவன் அல்லது கடிதல்ாற் களவேர் வாழ்க்கைக் கொடியோராகிய கள்வர் அவன் காட்டே இல்லையென்றும் குறித்தனர் என்க. 41-45. அணங்கு - தெய்வம். ஈண்டு உருமு முரருதென் றது அவன் அறத்தால் தெய்வீக அச்சமில்லாமை காட்டினர். நச்சினர்க்கினியர் அணங்கு" என்புழி உருமிடித்தலேயுங் கூறுதல் காண்க. அரவுந்தப்பா - பாம்புகளுங் கொல்லா. தப்புதல் - வாள் முதலிய வற்ருல் எறிந்து கொல்லுதல். காட்டுமாவும் உறுகண் செய்யா - காடுவாழ் புலி முதலியனவும் வருத்தஞ் செய்யா. அரவும் மாவும் விலங்கச்சம்பற்றிக் கூறி ஞர். பாம்பு உடலை வைத்து உயிர் நீக்குதலும் புலி முதலியன உடலையுண்டு உயிர் நீக்குதலும் வேற்றுமை 古厂GT、