பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 வண் புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு ' - என்று செய்யுளியலிற் கூறி, அதற்கு நன்கியையவே போங்தை வேம்பே ஆர் " என்று சேரர் பாண்டியர் சோழர் என்னும் தமிழ் மூவேந்தர் மாலையையே எடுத்து விளக்கிச் செல்லுதலான் அவர் காலத்து இத்தமிழ் நாடு மலேயமானடு, பாண்டிநாடு, சோணுடு எனப் பாகுபாடு பெற்று வழங்கியதன்றித் தொண்டைமானடு என்று ஒன்று பகுக்கப்பட்டு நான்கு நாடாயினதில்லை யென்பது தெளியலாகும். இதனுற் ருெண்டை யென்பது பழைய காலத்தே நாட்டின் பெயராகாமலே இருந்தது. அருவா, அருவா வடதலையுட் குடியேறிய தொண்டையர் என்னும் ஒரு குடியினரால் ஆளப்பட்ட கார ணத்தால் அவர் குடிப் பெயர்தந்து வழங்கப்பட்டதாதல் தெரியலாம். அர்வரு - குதிரை என்ப. ப ன் றி டு என்ரு ச் போலப் பரிமாநாடு என்று கொள்ளலாகும். அருவாளர் குதிரை வீரர் என கினேதல் தகும். இவர் அரசன் முசிரி காட்டுப்பி துண்டம் என்னும் ஊரினன். அவராஜன் என்று ஹத்திகும்பாவிலுள்ள காரவேலாசாசனத்தா லறியப்படுவான். அவராஜன் என்பது அர்வராஜன் என்பதன் மரூ வாகும். இவ்வரசனிருந்த பிதுண்ட ககரத்தையழித்துக் கழுதை யேர் பூட்டிக் காரவேலா உழுதனன் என்ப குதிரை யரசன் ஊரைக் கழுதை யேரால் உழுதனன் என்ற கயங்கண்டுணர்க. இவற்ருல் அருவாவடதலைப் பரப்பு ஒருவாறு உணரலாம். முசிலி நாடும் பிதுண்ட நகரமும் டாலமி, பெரிப்ளஸ் என்னும் மேற்றிசை யாத்திரிகர் இருவரானும் கூறப்பட்டனவாம். இனிப் பல்லவன் அசுவத்தாமன் வழியினன் ஆகலின் அப் பரம்பரையினர் அருவா என்று கூறப்பட்டாரோ என்று கூறுவதற்கு மிடனுண்டு.