உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 கே-ம-ஐகிய பல்லி என்னும் வள்ளலோருவன் இவ் சட்டை யுடையனாகிய காலத்தும் அவனைப் தாண்டையன் என்னும் பெயராற் கூறினா தோல்க-பியம் அகத் திணையியல் 54.2 சூத்திரவுரைக்கண் எடுத்துக் காட்டிய "முலைபொழி தீம்பான் மண்சேறு படுப்ப மலர்தலை யுலக மோம்பு மென்ப பாசிலைத் தொண்டைப் பல்லவ னாணையின் வெட்சித் தாயத்து வில்லே குழவர் பொருந்தா வடுகர் முனைச்சுரங் கடந்து கொண்ட பல்லா நிரையே” என்னும் மேற்கோட் பாடலில் "தொண்டைப் பல்லவன்" என வழங்கியுள்ளது காணலாம். ஆண்டுத் தொண்டையென்பது நாட்டின் பெயரோ, குடியின் பெயரோ என ஆராயப் புகின், வடவேங்கடந் தென் குமரியாயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்தைச் செந்தமிழ் நாடு கொடுந்தமிழ் நாடெனப் பகுத்த பழங்காலத்தே தொண்டை நாடென்னும் பெயரான் ஓர் நாடு பகுப்புண் டிருந்ததென்பதற்கு மேற்கோள் கிடையாமை அறியப் படும். செந்தமிழ்நாட்டை வைத்துச் சூழ்ந்துள்ளனவாகக் கூறப்பட்ட பன்னிரு கொடுந் தமிழ்நாட்டுப் பகுப்பில் இப் பெயரில்லாமை நன்கறிந்தது இந் நாட்டுப் பின்ன ருண்டாகிய சாசனப் பகுதிகள் பலவும் அப் பன்னி ரு கொடுந் தமிழ் நாட்டுட்பட்ட அருவாநாட்டையும் அருவா வட தலையையும் தொண்டைநாட்டு சேர்த் தோதுத லானே பழங்காலத்து அருவா, அருவா வட தலையென வழங்கிய நிலக்கூறு பின்னொரு காலத்தே யாதாமொரு காரணத்தால் தொண்டைநாடெனப்பட்டது என்பதே பொருந்தியதாகும். தொல்காப்பியனார் வடவேங்கடங் தென்குமரியாயிடைத் தமிழ் நிலத்தை