உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளந்த திருவாகிய மறுவை யணிந்த மார்பினையுடைய கடல்போலு நிறத்தை உடையவன் பின்னிடத்தோனாகிய சோழன் குடியிற் பிறந்தோன் என்றும், அக் கடலின் திரை கொண்டுவந்து ஏறவிட்டமையாற் பல வேற்படை யினையுடைய திரையனென்னும் பெயரை உடையவன் என்றும்,பகைப் புலத்துக் கொள்ளையாகிய உணவினை யுடைய தொண்டையைச் சூடினோருடைய குடியிலுள்ள வனே என்றும், நீர்ப் பெயற்றென்னும் ஊரினெல்லை யிலே போய் என்றும், கைவளப்பத்தையுடைய தலைவன் தன் பரிசிலை விரும்பித் தன்பாற் சென்றோர்க்குப் பாது காவலாகிய காஞ்சீபுரத்தே இருக்கின்றோன் எனவும், சிவந்த தீயைக் கைவிடாமற் காத்துப் போந்த இருடிகள் வெள்ளிய கொம்பினையுடைய களிறு முறித்துக்கொண்டு வந்த சமிதையாலே வேள்வியைச் செய்யும் விளங்குகின்ற அருவிகளையுடைய மலையை யாளும் உரிமையை யுடை யோன் எனவும் வரைந்தனர் நச்சினார்க்கினியர். இவற்றால் இப் பாட்டுடைத் தலைவன் குல முதல்வன் திருமால் வழிவந்தவன் எனவும், இக்குலத்தில் இவனுக்கு முன்னோனொருவன் கடற் றிரை தரு மரபினுண்டாயினன் எனவும், அவன் குலத்தில் இவன் திரையன் எனத் தன் குலப் பெயர் பூண்டனன் எனவும், சிறந்த வீரர்க ளாகிய இவன் முன்னையோர் தொண்டையர் எனப பெயர் சிறப்பரெனவும், இவனுக்கு நீர்ப்பேர் என்னும் ஊரும், திருமால் சயனங்கொண்ட திருக்கோயிலையுடைய எச்சியும், முனிவர் களிறுதரு விநன் வேட்கும் தெய்வத் தன்மை பொருந்தியதோர் மலையும் உண்டென்மை அறிந்துகொள்ளலாம். இங்கு இவன் முன்னையோராகக் கூறப்பட்ட தொண்டையர் என்னும் பெயர் தமிழிற் பழங்காலத்தே 'பல்லவர்" எனப்பட்ட ஒருவகையரசர்க் கன்றிப் பிறர்க்கு வழங்கக் காண்கிலேன். கள்வர்