உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைமானிளந்திரையன். இவன் சங்க மருவிய பத்துப் பாட்டுள் பெரும் பாணாற்றுப் படைத் தலைவன். கடியலூர் உருத்திரங் கண்ணனாராற் பாடப் பெற்றவன். இவனைப்பற்றி இப் பாட்டிற் கிடைக்கும் செய்திகள் பின் வருமாறு:- "இருநிலங் கடந்த திருமறு மார்பின் முந்நீர் வண்ணன் பிறங்கடை யந்நீர்த் திரைதரு மரபி னுரவோ னும்பன் மலர்தலை யுலகத்து மன்னுயிர் காக்கு முரசு முழங்கு தானை மூவருள்ளு மிலங்கு நீர்ப் பரப்பின் வளைமிக் கூறும் வலம்புரி யன்ன வசை நீங்கு சிறப்பி எல்லது கடிந்த வறம்புரி செங்கோற் பல்வேற் றிரையன்" "கொண்டி யுண்டித் தொண்டையோர்மருக• நீர்ப்பெயற்றெல்லை யோகி"" (பெரும்பாண் 20-37) (பெரும்பாண். 454) (319) ( 420) “கச்சி யோனே கைவண் டோன்றல்" "செந்தீப்பேணிய முனிவர் வெண்கோட்டுக் களிறுதரு விறகின் வேட்கு மொளிறிலங்கு கருவிய மலைகிழ வோனே.(198-500) இவற்றிற்கு 'அகன்ற இடத்தையுடைய உலகத்தில் நிலைபெற்ற உயிர்களைப் - புரக்கும் முரசு முழங்குகின்ற நாற்படையினை யுமுடைய சேர சோழ பாண்டியர் என்னு மூவரிலும், கடலிடத்துப் பிறந்த சங்கின் மேலாக உலகங் கூறும் வலம்புரிச் சங்கையொத்த குற்றம் நீங்கும் தலைமையினையும் மறத்தைப் போக்கின அறத்தை விரும்பின செங்கோலையுமுடைய, பெரிய நிலத்தை