பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

00 பெரும்பாணாற்றுப்படை விளக்கிவுரை

நாற்புறமும் நின்று ஆர்வாரப்பெருங்குரல் எழுப்புவர். அது கேட்ட குறும்பூழ்ப் பறவைகள், பயின்ற இடம் விட்டுப் பிரிகிறேர்மே என்ற வருத்தத்தோடு, பறக்கமாட்டாத் தம் பார்ப்புகளையும் தழுவி எடுத்துக்கொண்டு பறந்து போய், அடுத்திருக்கும் முல்லை நிலத்து மரங்களில் பாது காப்பான இடம் தேர்ந்து தங்கிவிடும். அவ்வாறு, அன்வ பறந்து செல்லும் அழகைப் பார்த்து அகமகிழ்ந்த பின்னர், உழவர்கள் புனத்துள் புகுந்து அறுவடை தொடங்குவர்.

‘ஞாங்கர்க் -

குடிநிறை வல்சிச் செஞ்சால் உழவர் நடைநவில் பெரும் பகடு புதவில் பூட்டிப் பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில் - உடுப்புழுக முழுக்கொழு மூழ்க ஊன்றித் தொடுப்பு எறிந்து உழுத துளர்படு துடவை அரிபுகு பொழுதின் இரியல் போகி . வண்ணக் கடம்பின் நறுமலர் அன்ன வளர்.இளம் பிள்ளை தழீஇக் குறுங்கால் . கறை அனல் குறும்பூழ் கட்சி சேக்கும் வன்புலம் இறந்த பின்றை.” - - . .

. . (196–206)

(ஞாங்கர்-ஆயர் குடியிருப்புக்கு அப்பால்; குடி நிறை வல்சி-வீடு நிறைந்த உணவினையுடைய, செஞ் சர்ல் உழவர்-பலசால் சிறக்க உழப் பழகிய உழவர்; நடை நவில் பெரும்பக்டு-ஏரில் நன்கு நடந்து பழகிய பெரிய எருதுகளை; புதவில் பூட்டி-மனைமுற்றத் திலேயே நுகத்தடியில் பூட்டிச் சென்று: பிடிவாய் அன்ன மடிவ்ாய் நாஞ்சில்-பெண் யானையின் வாயை ஒத்த வளைந்த வாயை உடைய கலப்பையின் உடுப்பு முக முழுக்கொழு-உடுப்பு முகம் போலும் பெரிய கொழு; மூழ்க ஊன்றி-மண்ணுள் மறையுமாறு அமுக்கிப்