பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார்: 101.

பிடித்து தொடுப்பு எறிந்து-பலசர்ல் உழுதுவிதைத்து: உழுத-முளைத்த பின்னர்க் கிளைபோக உழுத: ‘துளர்படு துடவை-மீண்டும் களைக் கொட்டுக்கொண்டு, களைபோக்க விளைந்த நிலத்தை அரிபுகு பொழுதில்அறுவடை செய்யும் காலத்தில்; இரியல் போகிஅஞ்சிப் பறந்து சென்று; வண்ணக்கடம்பின் நறுமலர் அன்ன-வெண்ணிறம் வாய்ந்த மணம் மிக்க கடம்ப மலரை ஒத்த வளர் இளம்பிள்ளை தழிஇ-வளரும் இளம் பார்ப்புகளைத் தழுவிக் கொண்டு; குறுங்கால் கறை அணல் குறும்பூழ்-சிறிய கால்க்ளையும்; கரிய கழுத்தையும் உடைய குறும்பூழ்ப் பறவை கட்சி சேக்கும்-காட்டுமரங்களிலே சென்று தங்கும்; வன்புலம். இறந்த பின்றை-மேட்டு நிலங்களைக் கடந்த பிறகு.)

8-1 வயலில் உழவர், வாப்பில் சிறார்.

மருத நிலத்து உழவர்களின் புன்செய் நிலத்து உழவுப் பணி பற்றிய விளக்கம் அளித்த புலவர், அடுத்து அவர்கள் மேற்கொள்ளும் நன்செய் உழவு பற்றிய விளக்கம் அளிக்கத் தொடங்கினார். - ... . . . . . . .

உழுகாள்ைகளின் உரமும் திறமும் பற்றிப், புன்செய். நில உழவு பற்றிய விளக்கத்தின் போதே விரித்துரைத்தும், புலவர் உள்ளம் அமைதியுற்றிலது. அத்துணைச் சிறப் புடையவை. அக்காளைகள். அதனால் நன்செய் உழவு பற்றிய விளக்கத்திலும், காளைகள் பற்றிய சிறப்பிற்கே முதலிடம் வழங்கியுள்ளார், ஆழ உழவேண்டும் நுண்சேறு. படுமளவு பலமுறை உழவேண்டும். என்ற உழவியல் முறை களை உணர்ந்த அவ்வுழவர்கள், உழுதது போதும் இனி உழத்தேவையில்லை எனக் கூறுமளவு முற்ற உழுது முடித்த பின்னரே காளைகளைப் பூட்டவிழ்த்து விடுவர். தரம்பு, நிலை உழவு முடிந்து, நன்செய் நிலை உழவு தொடங்கும்