பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



104 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

நெய்தலைக் களைந்து பறித்தனராயினும், அதன் அழகிய மலர்களை அழிக்க மனம் வராமையால், அம்மலர் களை வயல் ஒரத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் தம் சிறுவர்களிடம் கொடுத்தனர். நெடுநேரம் கழிந்துவிட்டது: களை பறிப்பது முடிய வி ல் ைல. சிறுவர்களுக்குப் பொறுமை குறைந்து விட்டது. நெய்தல் புது மலர்கள், தேன் நிறைந்து மகிழ்ச்சி தருவனவாக இருந்தாலும், அவை குவியல் குவியலாகக் குவிந்துவிடவே, அவர்களுக்கு அம்மலர்கள் மீது வெறுப்புப் பிறந்து விடவே, அவ்விடம் விட்டு விட்டு உடனே புறப்பட்டனர். வயலை அடுத்த நீர்நிலைகளில் முளைத்திருந்த நீர்முள்ளிச் செடிகளில், *ன்கவரும் கருதிற மலர்கள் மலர்ந்திருப்பது கண்டனர். உடனே அவற்றைப் பறித்தனர்; தண்ணீர் மட்டத்திற்கு மேல் வளர்ந்திருந்த தண்டாங்கோரையைப் பிடுங்கி வந்து, அதைப் பல்லிடையே வைத்து மெத்தென ஆகுமாறுமென்று நாராக்கி. முள்ளி மலர்களை மாலையாகத் தொடுத்து? மலரும், கோரையும் பறிக்க நீருள் இறங்கியபோது நனைந்து போன தலையில் சூடிக்கொண்டனர். -

. இரும்பை உருக்கி வார்த்தாற் போன்ற உடலமைப்பும், அது காரணத்தால் மென்மைத் தன்மை வாய்ந்ததாயினும், தளர்ந்து திரைந்து போகாத் திள்மையும், தொடர்ந்து தொழிலாற்றினாலும், சோர்ந்து போகாக் கைவன்மையும் வாய்ந்த உழவர் ஈன்ற மக்களாவர் அச்சிறுவர்கள். அதனால், வாளா மடிந்திருக்க இயலாது போகவே, அவ்விடம் விட்டு அகன்று, கண்பின் என்ற காரைப் பறித்து உடைத்து, அதன் உள்ளே இருக்கும் பொன்னிறமான சுண்ணப் பொடிகளைத் தம் மார்பில் கொட்டிப் பூசிக் கொண்டனர். கருநிறம் வாய்ந்த தம் அகன்ற மார்பு பொன்னிறத்தாது படிந்து, பொன்துகள் நிறைந்து மின்னும், பொன்னுறை கல் போல் காட்சி அளிப்பது கண்டு , அகமகிழ்ந்தனர். பசி வந்திடப் பத்தும் பறந்து போம் என்ப, பசிவிரப் பெற்ற அவர்கள்