பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

ப்ால் கேழ்

வால் உளைப் புரவியொடு வடவளம் தருஉம் நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை மாடம் ஓங்கிய மணல் மலி மறுகின் பரதர் மலிந்த பல்வேறு தெருவின், சிலதர் காக்கும் சேண்உயர் வரைப்பின், நெல் உழு பகட்டொடு கறவை துன்னா மேழகத் த்கரோடு எகினம் கொட்கும் கூழ் உடை கல் இல்’ x * * . (319–327),

உரை:

பர்ல் கேழ்-பால் போலும் வெள்ளிய நிறத்தினை யும், வால் உளைப் புரவியொடு-வெள்ளிய தலையாட் டத்தினையும் உடைய குதிரைகளோடு, வட்வளம் தரூஉம்-வடதிசை நாட்டின் நுகர் பொருள்களையும் கொண்டு வரும், நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பைமரக்கல்ங்கள் நிறைந்த பெருமை மிக்க கடற்கரைப். பக்கத்தினையும், மாடம் ஓங்கிய மணல் மலி மறுகின்இரு பக்கங்களிலும் மாடமாளிகைகள் உயர்ந்த மணல் நிறைந்த தெருக்களையும், பரதர் மலிந்த-வணிகர்கள் மிகுந்த, பல்வேறு தெருவின்-பல்வேறு தெருக்களையும், சிலதர் காக்கும்-காவல் தொழில் புரிவார் காத்து நிற்கும், சேண் உயர் வரைப்பின்-மிக உயர்ந்த பண்டக சாலைகளையும், நெல்உழு பகட்டொடு கறவை துன்னா-நெற்பயிர் விளைய உழும் காளைகளோடு, கறவை மாடுகளும் நெருங்காத, மேழகத் தகரொடு எகினம் கெர்ட்கும்-ஆட்டுக்கிடாயோடு நாய் சுழன்று திரியும், க்ழ்உடை நல் இல்-சோற்றுணவு மிகுந்த நல்ல இல்லங்களையும். -