பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுடைத் தலைவன் தொண்டைமான் இளந்திரையன்

தமிழ் நாடாண்ட பேரரசர் மூவரோடும் ஒருங்கு வைத்து மதிக்கத்தக்க மாண்புடையான் திரையன்; பட்டினப்பாலை பாடித் திருமாவளவனைப் பாராட்டிப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசில் பெற்ற பெரும் புலவராய கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் பாராட்டப் பெறும் பெருமை உடையவன் திரையன். அவன் வெற்றி தரும் வேற்பன்ட யுடையான்; வேங்கட நாடாண்ட விழுச்சிறப்புடையான்; அழியாப் புகழ் உடையான்; அழகிய அணிகலன் அணிந்த ஆண்மையாளன்: பூஞ்சோலை பல சூழ்ந்த பவத்திரி எனும் ஊர் உடையான் எனப் பிற புலவர்களும் அவனைப் பாராட்டியுள்ளனர், .

‘வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை’

-அகம்-85

‘செல்லா நல்லிசைப் பொலம்பூண் திரையன் பல்பூங்கானல் பவத்திரி’ -

. . . அகம்-240

திரையன் ஆண்ட நாடு, நிலவளம், நீர்வளம், மக்கள் வளம், மண்வளம் ஆய, வளம் பல பெற்று விழுமிய நாடாக விளங்கிற்று. தொண்டை நாட்டு மக்கள், இயல்பாகவே, நல்லறிவும், நற்பண்பும் உடையராவர். நாட்டு மக்கள் நல்லோராய் வாழ்வதற்கு அந்நாட்டு நல்லாட்சியே காரணமாம். திரையன் நாட்டு மக்கள் மனவளம் மிக்க மாண்புடையராதற்குத் திலரயன் ஆட்சி நலனே

காரணமாம. - - -