பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடியலூர் உருத்திரங்கண்ணனார் புலமை நலம் சான்ற பெரியராவர். அவர் பாக்கள் அரிய நயம் பல செறிந்து தோன்றும். அவர் எதைக் கூறினும் ஏதேனும் ஓர் அரும்பொருளை உள்ளடக்கியன்றிக் கூறார். அவர் அழகிய உவமைகளை எடுத்து ஆளவேண்டிய இடம் அறிந்து ஆளும் அறிவினராவார். - -

“முழவின் அன்னமுழுமா உருளி -

-பெரும்பாணாற்றுப்படை-47

தான் தனித்திருக்கப் பொருள் தேடிப்போன தலைவனை, பகற்காலமெல்லாம் தான் வாழ்ந்திருந்த மரத்தைத் தனியேவிட்டு பழந்தேடிப்போகும் வெளவாலோடு ஒத்திட்டு, கணவனைப் பிரிந்திருக்கும் தலைவி கூறுவதுபோல உருத்திரங்கண்ணனார் இயற்றியப் பாடல் ஒன்று குறுந்தொகையுள் இடம் பெற்றுள்ளது. -

‘பகல் உறை முதுமரம் புலம்பப் போகும் சிறுபுள் மாலை...’

--குறுந்தொகை-352. -

பொருள் தேடிப்போகும் தலைவன் கூற்றாக அமைந்த - பாடல் அகநானூற்றில் இடம் பெற்றுள்ளது.

- வயங்குமணி பொருத வகையமை வனப்பிற் போர்மடி நல்லிறைப் பொதியி லானே.

, -அகம்-167