பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. பாம்பணைப் பள்ளியானைப் பரவுக

‘கச்சியுள் புகுக’ எனப் பெரும்பாணனுக்கு வில்ட கொடுத்த புலவர், பெரும்பாணன் கச்சி செல்வது, ஆங்கு அரசோச்சியிருக்கும் திரையனைக் கண்டு, பாடிப் பரிசில் பெறவே என்றாலும், கச்சி செல்லும் அவன், திரையனைக் காண்பதன் முன்னர், ஆங்குக் கோயில் கொண்டிருக்கும் பாம்பனைப் பள்ளிப் பரமனை வழி படுதல் முறையாகும்

என்பதால், திரையன் நாளோலக்கச் சிறப்பினை எடுத்

துரைப்பதன் முன்னர், அப்பெருமான் பள்ளி கொண்டிருக்கும் திரு வெஃகா என்னும் திருக்கோயில், அக் கோயிலை அடுத்த சோலை, அச்சோலையை அடுத்து ஒடும் சிற்றாற்றுத்துறை, அச் சோலையிலும், துறையிலும், மகளிர் உடன் வர் வந்து ஆடி மகிழும் ஆடவர் ஆகியோர் பற்றியும் விளக்குவ

ராயினர். . . . . . .

கோயிலை அடுத்து ஒரு மலர்ச் சோலை அம் மலர்ச் சோலையை அடுத்து ஒரு சிற்றாறு; அது பெருக்கெடுக்கும் போதெல்லாம் சோலையுள் புகுந்து பாய்ந்து, ஆங்கு உதிர்ந்து கிடக்கும் இலைச் சருகு முதலாம் குப்பைகளை வாரிக் கொண்டு, புது மணலைப் பரப்பி விட்டுப் போகும். அம் மல்ர்ச் சோலையில், பல்வேறு வகை மரங்களும் நெருங்க வளர்ந்து தழைத்து நிற்கும். ஆதலால், அச் சோலையுள் வெயிலையே க்ாண இயலாது. குயில்கள் கூடச் சிறகடித்துப் பறக்க இயலாது. மரங்கள் ஊடே நுழைந்து தான் மெல்லப் பறத்தல் இயலும். அச் சோலையில் காஞ்சி