பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- கா. கோவிந்தனார் - - 175

துயில் இரியும்-மாடத்தின் இறப்புகளிலே வாழும் புறவின் சிவந்த கால்களையுடைய சேவல், இனிய துயிலை இழத்தற்குக் காரணமான, பொன் துஞ்சு வியன் நகர்-பொன் மகளாம் திருமகள் நீங்காது தங்கும் அகன்ற அரண்மனையில், குணகடல் வரைப் பின் முந்நீர் நாப்பண்-கிழக்குக் கடவின் அடிவான மாகிய, நிலத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத் தொழிலும் செய்யவல்ல நீரின் நடுவே, பகல் செய் மண்டிலம் பாரித்தாங்கு-பகற் பொழுதைச் செய்யும் ஞாயிறு கதிர் பரப்பி எழுந்தாற் போல, முறை வேண்டு நர்க்கும்-வலியரால் நலிவு எய்தி முறை வேண்டி வந்தார்க்கும், குறை வேண்டுநர்க்கும்வறுமையுற்று இரந்து வந்தார்க்கும், வேண்டுப, வேண்டுப வேண்டினர்க்கு அருளி-. வேண்டியவற்றை, வேண்டியவற்றை, அவற்றை வேண்டியவர்க்கு வழங்கி, இடை தெரிந்து உணரும் இருள் தீர்க் காட்சி- ஒருவர் உணர்த்த விரும்பியதை, அவர் உணர்த்த வேண்டாதே உணரவல்ல ஐயம் திரிபு அற்ற அறிவுடையனாய், கொடைக்சுடன் நிறுத்த கூம்பா உள்ளத்து-கொடை என்னும் கடமையைக் குறைவறச் செய்து முடித்த குறுகியதாகாது விரிந்த உள்ளத்துடன், உரும்பில் சுற்றமொடு இருந்தோன் குறுகி- குடிமக்கட்குக் கொடுமை நினையா அமைச்சர் சுற்றத்தோடு அரிய யணையில் இருந்த திரையனை அணுகி. - . .

14-2 திரையன் பெருமை -

திரையனைப் பாடிப் பாராட்டுவாயாக எனக் கூறிய புலவர், திரையன்ைப் பாராட்டும் முறை எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும் பெரும்பாணனுக்கு விளக்கத் தொடங்கினார். குலப்பெருமை பாராட்டாதவரை, தன் குலப் பெருமையை பிறர் பாராட்டுவது கேட்டு மகிழாத