பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

சிறந்தவன். அல்லது கடிந்து அறம் விளங்க நாடாண்டவன்.

வேற்படை பலவுட்ையான். o

இருகிலம் கடந்த திருமறு மார்பின் முந்நீர் வண்ணன் பிறங்கடை, அந்நீர்த் திரைதரு மரபின் உரவோன் உம்பல்; மலர்தலை உலகத்து மன்னுயிர் காக்கும் முரசுமுழங்கு தானை மூவருள்ளும் இலங்கு நீர்ப்பரப்பின் வளைமீக் கூறும் வலம்புரி யன்ன வசைநீங்கு சிறப்பின் அல்லது கடிந்த அறம்புரி செங்கோல் பல்வேல் திரையன்’ .

பெரும்பாணாற்றுப்படை-29-31

நீர்ப் பேர் எனும் பெயருடையதொரு பேரூர் இவனுக்கு உரித்து. காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு காவல் மேற் கொண்டவன். - . . . .

‘நீர்ப் பெயற்று எல்லை போகி’

. . - -பெரும் urr-319

{ :r 5T தோன்றல்’

--பெரும் பாண்-420

யானைகள் கொணரும் விறகினால் வேள்வி வேட்கும். அந்தணர் நிறைந்த வேங்கட மலையும் அவன் ஆட்சிக்கு உட்பட்டதே. - - . . . . . . . -

‘செந்திப் பேணிய முனிவர், வெண்கோட்டுக் களிறுதரு விறகின் வேட்கும் ஒளிறிலங்கு அருவிய மலைகிழ வோனே’ . . --பெரும் பாண்.498-500