பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 187.

பெற்றனவும், திருமால் பள்ளி கொண்டிருக்கும் பாற்கடலில் பிறந்ததினால், ஏனைக் கடலில் பிறந்த சங்கைக் காட்டிலும் மிக்க வெண்ணிறம் வாய்ந்த சங்கின் நிறம் காட்டும்

பிடரியும், மேனியும் கொண்டனவும், தன் உடன் பூட்டப்

படும் குதிரையோடு ஒத்துத் தொழில் புரியும் பயிற்சி

உடையவும் ஆகிய குதிரைகள் நான்கை, அத்தேரில் பூட்டி

விடுவன். அடுத்து, தன்னோடு போரிட வந்தோர்களை

வென்று, அவர்கள் புறமுதுகு காட்டி ஒடுங்கால் விட்டுச்

செல்லக், கைப்பற்றிக் கொணர்ந்த குதிரைகளுள், விண்ணில்

பறப்பதுபோல் விரைந்தோட வல்ல குதிரைகளைச் சேணம் பூட்டிக் கொண்டுவந்து வரிசையாக நிறுத்துவன்.

அரசவை தோறும் சென்று பாடிப் பாராட்டும் வாழ் வினராய இரவலரை, ஒரே அரசவையில் நெடிது நாட்கள் இருத்திக் கொள்வது முறையாகாது என்பதையும், அவர், அவன் அரசவையில் நலமே இருப்பினும், அவர் மனைகளில், அவரை எதிர்நோக்கியிருக்கும் அவர் சுற்றம், வறுமைக் கொடுமையால் துன்புற்றுப் போவர் என்பதையும் அறிந்தவன் திரையன். அதனால், உங்களுக்கு அளிக்க வேண்டியன எல்லாம் அளித்து, உங்களைத் தேரிலும், குதிரைகளிலும் ஏற்றி, அன்றே வழியனுப்பி வைப்பன். ஆகவே, பெரும்பாண எதை எதையோ எண்ணி. இனியும் காலம் தாழ்த்திவிடாது, கச்சிக்கு இப்போதே புறப்படுவா யாக! என்றார். ‘. . . . . - -

‘மங்குல் வானத்துத் திங்கள் ஏய்க்கும்

ஆடுவண்டு இமிரா அழல் அவீர் தாமரை, டிேரும் பித்தை பொலியச் சூட்டி, உரவுக் கடல்முகந்த பருவ வானத்துப் பகல் பெயல் துளியின் மின்னுகிமிர்த் தாங்குப் புனையிரும் கதுப்பகம் பொலியப் பொன்னின் தொடையமை மாலை விறலியர் மலைய நூலோர் புகழ்ந்த மாட்சிய, மால்கடல்