பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை -

வளை கண்டன்ன வால்உளைப் புரவி துணை புணர் தொழில நால்குடன் பூட்டி அரித்தேர் நல்கியும் அமையான், செருத்தொலைத்து ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஒழித்த விசும்புசெல் இவுளியொடு பசும்படை தரீஇ அன்றே விடுக்கும் அவன் பரிசில்”

- (480–493)

L}:

மங்குல் வானத்துத் திங்கள் ஏய்க்கும்-இருண்ட வானத்தின்கண் தோன்றும் முழுத் திங்களைப் போன்ற, ஆடு வண்டு இமிரா-பறந்து திரியும் வண்டுகள் மொய்க் காத, அழல் அவிர் தாமரை-தீயிலே இட்டு ஒளிவிடப் பண்ணிய பொற்றாமரை மலரை, நீடு இரும்பித்தை பொலியச் சூட்டி-நீண்ட கரிய மயிரிடையே அழகு பெறச் சூட்டி, உரவுக் கடல் முகந்த-அழித்தலும், ஆக்கலும் ஆகிய ஆற்றல் மிக்க கடல்நீரை முகந்து கொண்ட, பருவ வானத்து-கோடைக் காலத்துக் கரு மேகத்திலிருந்து, பகல் பெயல் துளியின்-பகற் போதில் பெய்யும் ம்ழைத் துளிகளின் இடையே, மின்னு நிமிர்ந் தாங்கு-மின்னல் தோன்றினாற் போல, புனை இரும் கதுப்பகம்.பொலிய-பின்னிவிட்ட கரிய மயிரில் அழகு பெறும்படி, பொன்னின் தொடை அமை மாலைபொன்னால் செய்து தொடுக்கப்பட்ட பொன்னரி மாலையை, விறலியர் மலைய-ஆடு மகளிர் சூடிக் கொள்ள, நூலோர் புகழ்ந்த மாட்சிய-குதிரை நூல் வல்லார் புகழ்ந்த மாண்புடையவள்ய, மால்கடல் வளை கண்டன்ன-திருமால் பள்ளி கொள்ளும் திருப்பாற் கடலில் தோன்றிய சங்கைக் கண்டாற் போன்ற, வால் உளைப் புரவி-வெள்ளிய பிடரி மயிரை உடைய, குதிரைகள், துணை புணர் தொழில-தன்னோடு