பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் - 191

முனிவர் குழாம், காட்டு யானைகள், தம் வெண்கோடுகளால் முட்டிச் சாய்த்து முறித்துக் கொண்டு வரும் விறகு கொண்டு, இட்ைவிடாத் தீ மூட்டி வேள்வி இயற்ற, இந் . நலங்களால் சிறப்புறும், அவன் வேங்கட மலையையும், அதைச் சூழ உள்ள நாடும், அம் மலையில், நீர்த்திவலைகள் நெடுந் தொலைவு தெறித்து வெண்ணிற ஒளி காட்டி, ஒ’ எனும் ஒலி எழுப்பி, ஒய்வு இன்றி ஒடிக் கொண்டேயிருக்கும் அருவிகள் போல் என்றும் வாழும்” என உளமார்ந்த வாழ்த்தை வழங்கி முடித்தார்.

வாழ்க திரையன்! வாழ்க பெரும்பாணன்! வாழ்க புலவர் கடியலூர் உருத்திரங் கண்ண்னார்! -

‘இன்சீர்க் -

கின்னரம் முரலும் அணங்குடைச் சாரல் மஞ்ஞை யாலும் பரம் பயில் இறும் பின். கலை பாய்ந்து உதிர்த்த மலர்வீழ் புறவின். மந்தி சீக்கும் மாதுஞ்சு முன்றில் செந்தீப் பேணிய முனிவர் வெண்கோட்டுக் களிறுதரு விறகின் வேட்கும் - ஒளிறு இலங்கு அருவிய மலை கிழவோனே’’

‘. (493–500)

:

இன்சீர்க் கின்னரம் முரலும்-இனிய, தாளத்தோடு

இயைந்த இசை எழுப்பவல்ல கின்னரப் பறவைகள். பாடும், அணங்குடைச் சாரல்-தெய்வங்கள் வாழும் மலைச்சாரவில், மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பில்மயில்கள் ஆடும் மரங்கள் அடர்ந்த சோலையில், கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ்புறவின்- முசுக்கலைகள் பாய்ந்து உதிர்த்த மலர்கள் வீழ்ந்து கிடக்கும் குறுங்