பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

என்பது உண்மை, ஆனால் அதைக் கொண்டே அவன் நல்லன. புரிபவன் என நம்பிவிடுதல் இயலாதே என்று எண்ணி விட்டால் என் செய்வது என்று அஞ்சிய பாணன், பெரும் பாண திரையன் அல்லது கடிந்தவன் மட்டுமல்லன்; அற

நினைவே உடையவன்; அறமே மொழிபவன்; அறச் செயலே

புரிபவன்; ஆக, திரையன் குடியாலும் சிறந்தவன்: குலத்தா லும் சிறந்தவன்; கொள்கையாலும் சிறந்தவன்; அவனைப்

பாடிப் பரிசில் பெறுவதால் உன்புகழ் பெருகுவதல்லது

குறையுறாது’ என்று கூறினான்.

ஆனால், அந்நிலையிலும் பாண! நீ கூறியன . அனைத்தும் நன்று. இத்துணைச் சிறந்தவன் இளந்திரையன் என்றாலும், அவன்பால் இன்றியமையாதிருக்க வேண்டிய மற்றொரு பண்பும் உளதா என அறிந்தல்லது அவனை அடைதல் இயலாது. நல்லவர்கள் வல்லவர்களாகவும் வாழ இவண்டும். நல்லவர் பால் வல்லமை இல்லையேல், வல்லவ ரால் அந்நல்லோர் அழிக்கப்பட்டு விடுவர் ஆதலின் அவர் நன்மையால் பயன் இன்றாம்; ஆகவே, நல்லோனாகிய திரையன்பால் வல்லமையும் உண்டு சொல்?’ என்ற வினா வினை எழுப்பிவிடுவனோ பெரும் பாணன் என ஐயுற்ற பாணன், பெரும்பாண! திரையன் தான் வல்லவனாதல் மட்டுமன்று: வல்லமை மிக்க பல்வகை வேற்படையும் உடையான்? ஆகவே அவன்பால் இன்றே செல்க. இனியும் எதை எதையோ எண்ணி ஐயங்கொண்டு அடங்கியிருந்து விடாது அவன்பால் செல்லத் துணிவாயாக. செல்லும் எண்ணம் உன் உள்ளத்தில் உருப்பெறுதல் ஒன்றுதான் தடை - உன் அவலமெல்லாம் அப்போதே அழிந்து அகன்றுவிடும். ஆக, அவன்பால் செல்லும் எண்ணம் உண்டாயின் கூறு, இளந்திரையன் இருந்தாளும் காஞ்சிமாநகரின் கவின், அவன் ‘ஆட்சி நிலவும் தொண்டை நாட்டின் வளமும் வனப்பும், . ஆங்கு வாழ் மக்களின் பண்பும் பெருமையும், அவன் நாடு கடந்து, அவன் நகர் அடையச் செல்லலாம் இடைவழியின்