பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 43

போலும், அவ்வருமைப்பாடு தோன்றவேத்ான், பாணன்

---

செல்குவையாயின் என்று கூறுகின்றனன்; ஆகவே, சென்றால் பெரும் பொருள் பெறலாம் என்றாலும், இத்துணை இடர்ப் பாடுகளையும் தாங்கிக் கொண்டு ஆங்கு அடையும் வரை:

எம் சுற்றத்தினருள் ஒருவரும் உயிரோடு இரார்; ஆகவே,

ஆங்குச் செல்வது அறிவுடைமையாகாது’ என்று பெரும் பாணன் எண்ணி விடுவனோ என்ற அச்சம் மிகவே, அவன் உள்ளத்தில் அவ்வச்சம் எழாமைப்பொருட்டு காஞ்சி மாநகர் சென்றடையும் இடைவழியின் ஊறற்று உணவு மிகும் இன்ப நிலையை எடுத்துக் கூறத் தொடங்கினான் பரிசில் பெற்று

மீளும் பாணன். - -

‘தொண்டைநாடு சான்றோர் உடைத்து’ என்ற உண்மையைப் பெரும் பாணனும், உணர்ந்திருப்பான் என்றா லும், அத்தகு சான்றோர்களுக்கிடையே சாலாதார் சிலரும் இருத்தல் கூடும்; மேலும் செல்வம் கொழிக்கும் வளநாட்டில்: அப்பெருவளத்தைப், பாடுபடாமலே தமதாக்கிக் கொள்ள தினையும் கொள்ளையர் சிலர் வாழ்வதும் இயலும் ஆதலின், திரையன் நாட்டில் கொடியோர் சிலர் வாழ, அக்கொடியோ

சால், தமக்கு இடைவழியில் இடையூறு நேர்தலும் உண்டாங்

கொல்? என்று நின்ைத்து, பெரும்பாணன் நடுங்காமை குறித்து பெரும்பாண இளந்திரையன் காவல் திறத்தில் கரைகண்டவன்; அதனால், அவன் கீழ்ப் பணிபுரியும் காவலர், பேரூர், சிற்றுார்களாம் மக்கள் வர்ழிடங்களில்

மட்டுமேயல்லாமல், காடும் மலையும் போலும் அம்மக்கள்.

வழங்கும் வழிகளிலும் நின்று காவல் புரிவர். பரந்து அகன்ற அவன் நாடெங்கும் இத்தகைய காவல்முறை நிலவுவதால் வழிச் செல்வர், இடைவழியில் தம்மைக் கண்ட் அளவிலேயே

அஞ்சி மெய்விதிர்த்து நடுங்குவராகவும், நடுங்கும் அவர்நிலை கண்டும் அவரைப் போகவிடாது, இடைமறித்து, வருத்தி

அவர் கைப்பொருள்களைக் கவர்ந்து செல்லும், ஆல்ை கள்வர்களை, வழிப்பறிக்காரர்களை நாட்டில் எங்கும்.