பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா.கோவிந்தனார் : 67

யதும், முன்பே உமிபோக்கியும், கல் நீக்கியும் இருப்பதால் புல்லரிசியை நீரில் இட்டு அரித்து எடுக்காமல், நேரே உலை யில் இடுவர். இவ்வாறு அரும்பாடுபட்டு ஆக்கிய புல்லரிசிச் சோற்றைக் கருவர்ட்டுடன் கலந்து, அனைவரும் ஒருங்கிருந்து உண்டு மகிழ்வர்.

- அவ்வெயினர்கள் உணவு உண்ணப் புகும் நிலையில் பாணர் போலும்இரவலர்களைப் பார்த்துவிட்டால், உடனே உண்பதை விடுத்து ஒடிச்சென்று எதிர்கொண்டு அழைத்து, வருவர். வந்தவர்களின் ஊர், பேர், உற்றார் பற்றி உசாவுவர். வந்தவர்கள், பிறர்மேல் வலியச் சென்று போரிட விரும்பாது, பிறர் ஆணவம் மிகுந்து, தம் ஆற்றலை நிலை நாட்ட வலிய போர் மேற்கொண்டு வருவ்ராயின், அவரை அழித்து வெற்றி கொண்டு அது பாராட்டி அரசு சூட்டும் பொன்னாலான தும்பை மலர் ம்ாலை அணிந்து சிறக்கும் சிறப்புமிகு வீரர்களுக்குத் தலைவனும், பகைப்படை எவ்வளவு வலிவு மிகுந்த பெரும்படை ஆயினும், அப் படையை வென்று முன்னேறுவதல்லது, தோற்றுப் பின்னி டாப் பெருமை மிகு நாற்படை கொண்டவனும், இவ்வாறு ஆற்றல்மிகு வீரர்களையும் நாற்படைகளையும் உடைமை யால், களம், பலவென்று, அது பாராட்ட, காலில், அரிய வேலைப்பாடு அமைய பொன்னால் ஆக்கப்பெற்ற விரக் கழல் புனைந்தவனும், பல்வேறு வள்ங்களைக் கொண்டு இருப்ப தோடு, நின்ற கோலத்து நெடும்ால் கோயில் கொண்டிருக்கும் வேங்கடமலை நாட்டை, உடையவனும் ஆகிய இளந்திரை யன் புகழை வாய்ாரப்பாடிய பின்னர், அவனைப் பாடிப் ப்ாராட்ட அவன் அவை நோக்கிச் செல்லும் பாணர்கள் யாம் எனக்கூறியது கேட்ட ஆக்கணமே,திருவுடை மன்னனாம்திரை யனைத் திருமாலாகவே கருதி அன்பு செலுத்தும் எயினர்கள் அவன் புகழ்பாடும் பாணர்களையும் கடவுளர் வடிவ்ங்களர் க்வே மதித்துத் தம்பசியையும் மறந்து, பாணனையும்.அவன் உடன் வந்திருப்பார் அனைவரையும். அமர்த்தி, அவர் முன் ப்ர்ப்பிய தேக்கிலைகளில், ஆக்கி வைத்திருக்கும் உணவைத்