பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ர். கோவிந்த்னார்’

பொய்த்துவிட்ட காலத் தில்; நீர் நசைஇக் குழித்த-நீர் விரும்பித் தோண்டிய அகழ் சூழ் பயம்பின் அகத்துஆழ்ந்த பள்ளங்களைச் சூழ்ந்து உள்ள மூடு குழிகளின் உள்ளே, ஒளித்து ஒடுங்கி-மறைந்து ஒதுங்கி; புகழா வாகை-அகத்தியின், பூவின் அன்ன-வெண்ணிறம் வாய்ந்து வளைந்த மலரை ஒத்த; வளைமருப்பு ஏனம்வளைந்த கொம்பினையுடைய காட்டுப் பன்றியின்; வரவு பார்த்து இருக்கும்-வருகையை எதிர்நோக்கி இருக்கும்; அரைநாள் வேட்டம் அழுங்கின்-நடுயா மத்து வேட்டை பயனளிக்காது போகவே கைவிடுவ ராயின், பகல்நாள்-பகற்போழ்தில்; பகுவாய் ஞமலி யோடு-அங்காந்த வாயையுடைய வேட்டை நாய் களுடன்: பைம்புதல் எருக்கி-பசிய சிறுதுாறுகளை அடித்து; தொகுவாய் வேலி-குறுகிய இடத்தையுடைய வேலியில்; தொடர்வலை மாட்டி-பின்னப்பட்ட வ்லை களைமாட்டிமுள்அரைத்தாமரை-முள்ளைத்தண்டிலே உடைய தாமரை மலரின் புல் இதழ்ப்புரையும்-புற இதழை ஒக்கும்; நெடும் செவிக் குறு முயல்-நெடிய காதுகளையுடைய குறிய முயல்களை; போக்கு அற வளைஇ-தப்பிப் போகவிடாமல் வளைத்துப் பிடித்து: கடுங்கண் கானவர்-கொடிய க்ானவர். கடறு-காட்ட கத்தே கூட்டு உண்ணும்-உறவினரோடு கூடி இருந்து உண்ணும்; அருஞ்சுரம்-அரிய பாலைநிலத்தை இறந்த அம்பர்-கடந்துவிட்ட பின்னர்த்தாகிய இடத்தில்.)

5-2 குறும்பில் எயினர் விருந்து

- குறுங்காட்டு வழிச் சென்று பாலைநிலத்து எல்லையை அடைந்தவழி ஆங்குப் பெரும்பாணர் கண்களில் புலப்படும் எயின்க் குறும்புகள் பற்றிக் கூறத் தொடங்கினார். குறும்பு என அழைக்கப்படும் அச்சிற்றரசன் அகத்தே, படைக்கலன் களை இட்டுவைக்கும் படைக்கலக்கொட்டில் ஒன்று இருக்

. *