பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பெரும் பெயர் முருகன்

முருகு என்னும் சொல் தனித் தமிழ்ச் சொல். தமிழ் எழுத்துக்களின் மூவினமும் இச் சொல்லில் அமைந் துள்ளன. மு-என்பது மெல்லினம்: ரு-என்பது இடை யினம்; கு-என்பது வல்லினம். தமிழர் சிறப்பாக வைத் துப் போற்றும் தமிழ்க் கடவுளாகிய வடிவேற் பெருமானு டைய திருநாமம், தமிழ் எழுத்துக்களிலுள்ள மூவினத் தினின்றும் எழுத்தைப் பெற்றிருத்தல் பொருத்த மானதே,

முருகன் என்பதற்கு முருகை உடையவன் என்பது பொருள். முருகு என்பதற்குப் பல பொருள்கள் உண்டு. அவற்றுள் தலைமை பெற்றவை நான்கு. நறுமணத்தை முருகு என்னும் சொல்லால் குறிப்பர். தெய்வத் தன் மைக்கு முருகு என்பது ஒரு பெயர். அழகையும் இளமை யையும் குறிப்பதற்கு முருகு என்னும் சொல்லே ஆள்வர். மணம், தெய்வத் தன்மை, இளமை, அழகு என்னும் நான்கு பொருள் முருகு என்னும் சொல்லுக்கு உண்டு. இந்த நான்கு முருகுகளில் வடிவேற் பெருமான் எந்த முருகை உடையவன்? இந்த நான்கு முருகுகளேயுமே உடையவன். முருகு என்னும் சொல்லுக்கு உரிய பல பொருளும் முருகனுடைய பண்புகள். அவன் நறுமணம் உடையவன்; தெய்வத் தன்மையிற் சிறந்தவன்; என்றும் மாருத இளமையுடையவன்; என்றும் நீங்காத அழகை உடையவன். . . . . . . . - . . .

முருகன் திருமேனி துTய்மையுடையது; ஞான மணம் கமழ்வது. - - . . . .

கந்தமிகு நின்மேனி என்று அருட்பிரகாச வள்ளலார் பாடுகின்ருர்,