பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும் பெயர் முருகன்

திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் முருக வேளுக்குரிய பல திருநாமங்களே அருச்சனை போலச் சொல்லியிருக்கிருர், அந்தத் திருநாமக் கோவையிலே,

அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக

என்பது ஒரு தொடர். பிறராலே பெறுவதற்கு அரிய இலக்கணங்களே உடைய பெரிய பெயரையுடைய முருகனே! என்பது இதன் பொருள். முருகன் என்னும் திருநாமம் உடையவன் எம் பெருமான்; அப் பெயரால் பல இலக்கணங்கள் குறிக்கப் பெறுகின்றன; அவ்விலக் கணங்கள் அனைத்தும் ஒருங்கே உடையவன் வடிவேலன்; பிறரிடம் அவை அனைத்தும் ஒருங்கே இல்லாமையால் அத் திருநாமம் பிறரால் பெறுவதற்கு அரிதாயிற்று. .

முருகன் என்ற திருநாமம் முருகு என்றும் கிற்கும். திருமுருகாற்றுப்படை என்னும் நூற் பெயரில் முருகு என்ற சொல்லே இருக்கிறது ; திரு-முருகு-ஆற்றுப்படை எனப் பிரியும். 'வாழிய முருகே’’ என்று நற்றினை கூறு கிறது. "முருகாற்றுப் படுத்த உருகெழு வியனகர்" என்று திருமுருகாற்றுப்படையில் ஒரடி வருகிறது. அவ், விடங்களிலும் முருகனைக் குறிக்க முருகு என்ற சொல்லே. அமைந்துள்ளது.