பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 பெரும் பெயர் முருகன்

தேவர்கள் அறியாத தேவ தேவன், தேவ் தேவன் திருப்பெய ராகவும் என்ற அடிகள் நினைவுக்கு வந்தன.

மலையின்மேல் ஏறிைேம். அங்கே விநாயகர், சூரியன், அம்பிகை, திருமால், சிவபெருமான் ஆகியவர்களுக்குத் தனித்தனியே கோயில்கள் இருந்தன. சிவபெருமான் லிங்கத் திருமேனியோடு இருந்தார். கோயிலில் யார் வேண்டுமானலும் உட்சென்று இறைவனைத் திண்டிப் பூசை செய்யலாம். அத்த ஊருக்கு வழக்கமான கொட்டு முழக்குகள் இருந்தன. கோயிலோ, விக்கிரகமோ கொட்டு முழக்கோ எதுவும் எங்கள் உள்ளத்தைக் கவரவில்லை. வானளாவிய கோபுரமும் சிற்பவேலைப்பாடும் உள்ள தமிழ் நாட்டுக் கோயில்களைக் கண்ட கண்களுக்கு வடநாட்டுக் கோயில்களேக் கண்டால் மதிப்பே உண்டாகாது. விக் கிரகங்களும் அத்தகையனவே. - . . . .

அங்கே முருகன் திருக்கோயிலும் உண்டென்றுசொன் ர்ைகள். முருகனை வடகாட்டார் கார்த்திகேயர் என்ற பெயராலேயே வழங்குவார்கள். கார்த்திக் கோயிலுக்கு ஆர்வத்தோடு போனேன். மயில்மீது எழுந்தருளிய திருக்கோலத்தில் ஆறுமுக மூர்த்தியாகக் கார்த்திகேயர் எழுந்தருளியிருந்தார். பளிங்கில்ை அமைந்த திருவுருவம். தரிசனம் பண்ணிக்கொண்டிருந்தபோது, என்னுடன் வந்த நண்பர், இங்கெல்லாம் முருகன் கோயிலில் ஒரு விசேஷம் உண்டு; தெரியுமா?’ என்று கேட்டார்.

தெரியாதே' என்றேன். "நம்முடைய காட்டில் பாமரர்கள் பிள்ளையாரைப் பற்றி ஒரு கதை சொல்வார்களே; அதுபோல இங்கிே கார்த்திகேயரைப் பற்றி ஒரு கதை சொல்கிருர்கள். பிள்ளையார் பிரம்மச்சாரியென்றும், தம்முடைய அம்மா