பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்கு முருகன்

புளுவில்

புனுவில் உள்ள கலைக்கழகத்தார் நடத்திய தமிழ் விழாவுக்குப் போயிருந்தேன். ஐந்தாறு நாட்களுக்குமேல் தங்கியதால், அருகில் உள்ள காட்சிகளைக் காண எண்ணி னேன். முக்கியமாகத் தலங்கள் எவையேனும் இருந்தால் பார்க்கவேண்டுமென்று விரும்பினேன். புைைவ அடுத்து ஒரு மலை இருக்கிறதென்றும், அங்கே சிவபெருமான் திருக் கோயில் ஒன்று இருக்கிறதென்றும் சொன்னர்கள். அன்

பர்களுடன் அந்த மலையைத் தரிசிக்கப் போனேன்.

மலையின் பெயர் பார்வதி மலை என்பது. பர்வதம் என்று இருந்தது, அது மகாராஷ்டிரத்தில் பர்வத் என்ருகி. அதைேடு பர்வத்மலை என்று ஆயிற்ரும்; அதுவே பார்வதி மலை என இப்போது மாறி வழங்குகிறதென்ருர்கள்: நம்முடைய நாட்டிலும் நீலகிரி மலை என்று கிரியையும் மலை யையும் சேர்த்துச் சிலர் வழங்குகிருர்களே, அப்படிப் பர்வ தத்தையும் மலையையும் ஒற்றிக்கு இரட்டியாகச் சேர்த்து வழங்குகிருர்கள். . - மலையின்மேல் ஏறினுேம். பத்துப் படிக்கட்டுகளுக்கு ஒரு முறை படி அகலமாக இருக்கிறது. மகாராஷ்டிர அரசர்கள் ஆண்ட காலத்தில் அவர்கள் குதிரை மீது ஏறியபடியே இந்த மலையின்மேல் ஏறுவார்களாம். குதிரை ஏறுவதற்காகவே இப்புடி இடையிடையே படி அகலமாக இருக்கிறதாம். மலையின்மேல் உள்ள கோவிலுக்குத் தேவதேவேசன் கோயில் என்று பெயர். அந்தத் திரு நாமத்தைக்கேட்டதும் எனக்குத் திருவாசகத்தில் உள்ள,