பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16).4 பெரும் பெயர் முருகன்

பாட்டைப் பாடினவுடன் என் நண்பர்களாகிய தமிழர்கள், ! "மிகவும் பொருத்தமாக இருக்கிறது” என்ருர்கள். பொருத்தமோ பொருத்தம் இல்லையோ, அவர்கள் கட்டி விட்ட கதைக்கு என் கற்பனே தாழ்ந்தது அன்று என்றே, சொல்வேன்.

பம்பாயில்

புண்ணியமர நகரமாகிய புனவிலிருந்து பம்பாய்க்குச் சென்றேன். அங்கே தமிழர்கள் ஆயிரக்கணக்கில் இருக் கிருர்கள். முன்பு ஒரு முறை போயிருந்தபோது யுத்த காலமாகையால், அந்நகரில் இருந்த மியூஸியத்தை முடி யிருந்தார்கள். இம்முறை அதைத் திறந்திருந்தார்கள். பல அருமையான பண்டங்களைத் தொகுத்து வைத்திருக்கும் இடமாகையால் போய்ப் பார்க்கவேண்டும் என்ற அவா உண்டாயிற்று. அன்பர்களுடன் சென்றேன். சிந்துவெளி யில் மொகெஞ்சதடோவிலிருந்து அகழ்ந்தெடுத்த பொருள் கள் சிலவற்றை அங்கே கண்டேன். ஒவியப்பகுதி, மர வகை, விலங்கினம் ஆகிய பகுதிகளைப் பார்த்துவிட்டுச் சிற்பப்பகுதிக்கு வந்தேன். உலோக விக்கிரகங்கள் உள்ள பகுதிக்கு வந்து ஒவ்வொரு விக்கிரகமாகப் பார்த்தேன்.

ஒரு விக்கிரகத்தின் மேல் விஷ்ணு' என்ற பெயரை ஒட்டியிருந்தார்கள். இருமருங்கும் தேவியர் உடன் வீற்றி ருக்க நடுவே கடவுள் அமர்ந்திருந்தார். நான் கூர்ந்து கவ னித்தேன். திருக்கரங்களில் சங்கில்லை, சக்கரம் இல்லை; ஆனல் வச்சிராயுதம் இருந்தது. -

'இது முருகன் திருவுருவம்' என்று சொன்னேன். "அது எப்படிச் சொல்லலாம்? இந்தத் துறையில் பழக்க முள்ளவர்கள் இதைப் பார்த்தறிந்து விஷ்ணு என் நல்லவா எழுதியிருக்கிருர்கள்?’ என்று அன்பர்கள். கேட்டனர். - . - . - - - -