பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டு முருகன் 105

'இது திருமால் உருவம் அன்று என்பது நிச்சயம். முருகன் பிரம்மச்சாரி என்ற நினைவில் ஊறிப்போயிருக்கும் வடநாட்டாருக்கு, இரு மனேவியருடன் இருக்கும் கடவுள் திருமாலே யன்றி வேறு இல்லை என்ற நினைவுதான் இருக் கும். இரு தேவியரைக் கண்டவுடனே மற்றவற்றை ஆரா யாமல் மகாவிஷ்ணு என்று போட்டுவிட்டார்கள்' என்று. சொல்லிக்கொண்டே வந்தேன்.

என் கண்கள் அந்த விக்கிரகத்தின் மேலும் கீழும் ச்ென்றன. திடீரென்று, "இதோ, இதோ! எனக்குத் தக்க சாட்சி கிடைத்துவிட்டது” என்றேன். - -

அன்பர்கள் ஆவலோடு பார்த்தார்கள். அந்த மூர்த்தி எழுந்தருளியிருக்கும் பீடத்தில் மயிலின் உருவம் பொறித் திருந்தது. 'மயில்வாகனத்தின் மீது எழுந்தருளியிருப்ப தாகப் பாவம்; மயில் வாகனக் கடவுள் முருகன, திருமாலா?' என்று வெற்றி மிடுக்குடன் நான் கேட்டேன். அந்த வாகனத்தைக் கருடன் என்று சொல்ல இடமில்லை; மயிலின் தோகை நீளமாக இருந்தது; ஆதலின் மயில் என்று தெளிவாகத் தெரிந்தது. -

வடநாட்டுக் கார்த்திகேயராக இருந்தால் மியூஸியத்து அதிகாரிகள் தெரிந்து குறித்திருப்பார்கள். இதுவோ இரண்டு தேவிமாருடன் அமர்ந்த முருகனக இருத்தலின் அவர்களுக்குத் தெரியவில்லை. -

வங்காளத்தில்

ராமகிருஷ்ண பரமஹம்சருடைய உபதேசங்ககிளப் படித்துக்கொண்டிருந்தேன். அந்த மெய்ஞ்ஞானி அரிய விஷயங்களை யெல்லாம் இனிய உபமானக் கதைகளைக் கூறி விளக்குகிருர். பல புராணக் கதைகளையும் எடுத்