பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 பெரும் பெயர் முருகன்

துரைக்கிருர். அப்படி அவர் கூறியுள்ள கதைகளில் கார்த்திகேயரைப் பற்றிய கதையும் ஒன்று.

நான் எல்லாப் பெண்களேயும் பராசக்தியாகவே பாவிக்கிறேன். ஒரு சமயம் கார்த்திகேயர் ஒரு பெண். பூனேயோடு விளையாடிக் கொண்டிருந்தார். அதன்மேல் அவர் கை நகம் பட்டுக் காயமாகிவிட்டது. பிறகு அவர் தம் அன்னையைத் தரிசித்தார். அன்னேயின் திருமேனியில் நகத்தால் கீறிய காயம் இருப்பதைக் கண்டார். இது என்ன?’ என்று கேட்ட போது, 'நீ விளையாட்டில் கீறின காயம்" என்று பராசக்தி உரைத்தாள். அதைக் கேட்ட வுடன் கார்த்திகேயருக்கு வருத்தம் உண்டாகிவிட்டது. 'பெண் இனம் முழுதும் என் அன்னேயின் உருவம் என்பதை இதுவரையிலும் அறியவில்லையே! நான் யாரை பும் மணம் செய்து கொள்ளப் போவதில்லை. உலகத்துப் பெண்கள் யாவரும் என் அன்னேயின் உருவமாக இருக்கும்போது, எனக்கு மனேவி எங்கே அகப் படுவாள்?' என்று எண்ணிப் பிரம்மசாரியாகவே இருந்துவிட்டார்." -

இவ்வாறு பரமஹம்ஸர் ஒரு கதை சொல்லுகிரு.ர். இதனால், வங்காளத்திலும் கார்த்திகேயரைப் பிரம்ம சாரியாகவே எண்ணுகிருர்கள் என்ற செய்தி தெரிய வருகிறது. - . . . . - 'நீலச்சிகண்டியில் ஏறும் பிரான், எந்த நேரத்திலும் கோலக் குறத்தியுடன் வருவான்’ என்று அருணகிரிநாதப் பெருமான் பாடுகிருர். வடநாட்டுக்குப் போகும்போது மாத்திரம் தனியாக, பிரம்மசாரியாகப் போவான் போலும்! . . . - - - -

காலத்துக்குக் காலம் முருகனைப் பற்றிய வரலாறுகள் வேறுபடுவது போலவே, இடத்துக்கு இடங்கூட வேறுபடுகின்றது,