பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம்

முருகவேளுக்குரிய படை வீடுகள் ஆறு. படை வீடு என்பது, அரசன் ஒருவன் தன் பகைவரோடு போர் செய்யும் பொருட்டுப் படைகளுடன் பாளையம் இறங்கி யிருக்கும் இடத்துக்குப் பெயர். படை தங்கியிருக்கும் இடம் என்பது அதன் பொருள். . -

முருகன் சூரபன்மைேடு போர் புரியச் செல்லுமுன்

திருச்செந்தூரில் தங்கி, வீரவாகு தேவரை அங்கிருந்து சூரனிடம் தூதாக அனுப்பி, அப்பால் போருக்குப் புறப் பட்டான். அப்போது திருச்செந்தூர் அப்பெருமானுக்குப் படைவீடாக உதவியது. -- -

எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு கருணைத் திருவிளையாடல் செய்யும் பொழுது ஒவ்வோரிடத்தில் வெளிப்படுகிருன். அந்தத் திருவிளையாட்டோடு சிறப்பான தொடர்பு பூண்டு விளங்குவது அந்தத் தலம். சிவபெருமான் யாண்டும் நிறைந்தவனுயினும், பதஞ்சலி வியாக்கிரபாதர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி ஆனந்தத் தாண்டவம் புரிந்த இடமாதலின் தில்லைக்குச் சிறப்பு உண்டாயிற்று. இப்படியே முருகவேள் திருக்கோயில் கொண்டுள்ள தலங்களும் அமைந்திருக்கின்றன.

ஆறு படைவீடுகள்

ஆறு படைவீடுகள் முருகனுக்குரிய தலங்களுள்