பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம் f 11

செயல்களையும் பரிபாடல் என்ற சங்க நூல் மிக விரிவாகத் தெரிவிக்கிறது. -

திருப்பரங்குன்றத்தில் உள்ள பொய்கையில் நீர் நிறைந்திருந்தது. மழை வளம் சிறந்திருந்தமையால் மலே முழுவதும் அடர்ந்த மரச் செறிவு இருந்தது. அருவியும் சுனைகளும் இருந்தன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் எங்கும் காடுகள் மிகுதியாக இருந்தன. மக்கள் பெருகப் பெருகக் காட்டை வெட்டி நாடாக்கினர். அதல்ை மழை வளம் வர வரக் குறைந்து போயிற்று.

அக்காலத்தில் திருப்பரங்குன்றத்தில் அருவி கூட இருந்ததென்றே தெரிகிறது. அதில் ஆடவரும் மகளிரும் நீராடினர். புனல் விளயாட்டு அங்கே நடைபெற்றது. மணமாவதற்கு முன் முருகனுடைய திருக்கோயிலைச் சார்ந்த சோலேயிலே சந்தித்து அன்பு செய்தனர், சில காதலர். மணம் செய்து கொண்டவர்கள் இங்கே வந்து தங்கி இன்புற்றனர். கன்னிப் பெண்கள் இத்தலத்திற்கு வந்து, தமக்கு நல்ல கணவராக வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். மணமான மகளிர் ஊருக்குச் சென்ற கணவர் போன காரியம் பலித்து விரைவிலே வந்து சேர வேண்டுமென்று வேண்டினர். வேறு சில மகளிர் தங்களுக்குக் குழந்தை பிறக்க வேண்டுமென்று பிரார்த் தன செய்தனர். அவர்கள் கோயில் யானைக்குக் கரும்பு முதலியவற்றைக் கொடுத்தார்கள். சோற்றைக் கொடுத் தார்கள். அது உண்டொழிந்த மிச்சத்தைப் பிரசாதமாகப் பெற்று உண்டனர். அதனல் யானையைப் போலப் பலமுடைய பிள்ளே பிறக்கும் என்ற எண்ணம் அவர் களுக்கு இருந்தது போலும்! . . . . . . . . . . . . . . . . . . . . . . .

முருகவேள் திருக்கோயிலுக்கு வருகிறவர்கள் அறம், , பொருள், இன்பம், வீடு என்ற கால்வகை ஊதியங்களை