பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 பெரும் பெயர் முருகன்

யும் தனித்தனியே பெற எண்ணி வந்தார்கள். முருக னுடைய சக்கிதியில் பொன்லுைம் வெள்ளியிலுைம் செய்த பலவகைப் பொருள்களேக் கொணர்ந்து சமர்ப்பித்தனர். முருகனுடைய கையில் உள்ள ஆயுதங்களையும், மணியை யும், அவனுடைய வாகனங்களேயும் கொண்டுவந்து ’கொடுத்தனர்.

திருப்பரங்குன்றத்துப் பொய்கையிலே ஆடவரும் மகளிரும் நீந்தி விளையாடினர். நீர் வீசு கருவியினல் நீரை ஒருவர் மேல் ஒருவர் வீசிக் கொண்டனர். ஊடியும் கோபித் தும் மறைந்தும் பொழுது போக்கினர். உதிர்ந்த மலர்களே படுக்கையாகப் படுத்து உறங்கினர்.

சிலர் குரங்குகளுக்குச் சிற்றுண்டிகளே வீசினர். அவை தாவித் தாவி ஒடும் வேடிக்கையைப் பார்த்தனர்.

பாண்டிய மன்னன் விழாக் காலங்களில் தன்னுடைய பரிவாரங்களோடு அங்கே வந்து தரிசனம் செய்தான். அந்தப் பரிவாரங்கள் தேர்மேலும், யானே.மேலும், குதிரை மேலும் வந்தன. திருப்பரங்குன்றத்தில் மக்கள் தரிசிக்க நடந்து வரும் வழியை விட்டுவிட்டு மரத்தடிகளில் அவ் வாகனங்களே கிறுத்தினர். >

திருப்பரங்குன்றத்தில் ஒரு சித்திரசாலை இருந்தது. எழுத்து கிலே மண்டபம் என்று சித்திரசாலேயைச் சொல் வார்கள். நல்ல வண்ணங்களைக் கொண்டு எழுதிய வி யங்கள் அங்கே இருந்தன. மலர்கள். பூம்பொய்கை முதலிய அழகிய காட்சிகள் அந்தச் சித்திரங்களில் இருந் தன. துருவ சக்கரமும் அதனைச் சார்ந்த சூரியன் முதலிய கிரகங்களும் ஒரு சித்திரத்தில் அமைந்திருந்தன. இரதி யின் அழகிய ஓவியமும் காமனது உருவமும் ஒரு சித்திரத் தில் இருந்தன. இவற்றை அன்றிப் புராணக் கதைகளே விளக்கும் சித்திரங்களும் இருந்தன. அகலிகையின்