பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம் 113

கதையை விரிவாகக் காட்டும் ஒவியங்கள் இருந்தன. இவற்றை ஆடவரும் மகளிரும் கண்டு களித்தனர்.

பாடுபவர்கள் போடும் தாளமும் ஆடுபவர்கள் போடும் தாளமும் சேர்ந்து முழங்க, குன்றத்திலிருந்து. அவற்றின் எதிரொலி முழங்கியது. சிலர் பிரம்ம வீணேயை வாசித்தார்கள்; சிலர் ஐந்து துளைகளே உடைய குழலே ஊதினர்; சிலர் ஏழு துளேகளேயுடைய புல்லாங்குழலே வாசித்தனர். சிலர் யாழ் வாசித்தனர். அதற்கு ஏற்ற வாறு சிலர் முரசொலித்தனர்.

திருப்பரங்குன்றத்தின் மேலும், முருகவேளின் மேலும் வேல்மயில் என்பவற்றின் மேலும் ஆணேயிட்டு, ஆடவர் கள் தாங்கள் தூயவர்களென்று காதலிமாரைத் தேற்றினர். . - -

இவற்றைப் போன்ற பல செய்திகளைப் பரிபாடலில் உள்ள செய்யுட்கள் தெரிவிக்கின்றன. - -

நல்லந்துவளுர் பாட்டு

ஆசிரியர் நல்லந்துவர்ை பாட்டு ஒன்று பரிபாடலில் உண்டு. அவர் மதுரைக்காரர். அவர், பரங்குன்று. இமயக் குன்றத்துக்கு ஒப்பாக இருக்கிறது' என்று சொல் கிருர். எதல்ை என்பதை அவரே விளக்குகிறர்.

திருப்பரங்குன்றத்தில் முருகன் எழுந்தருளியிருப்பதை, உணர்ந்த தேவர்களும் அசுரர்களும் தவ முனிவர்களும், அங்கே கூட்டமாக வந்து வழிபடுகின்றனர். யார் யார், வந்திருக்கிருர்கள்?-துழாய் மாலையையும் அளவற்ற, செல்வத்தையும் கருடக் கொடியையும் உடைய திருமால், முதலில் வருகிருன். அவனே அடுத்து இடப வாகனத்தை யுடைய சிவபெருமான் எழுந்தருளுகிருன். பிரமதேவனும்,

பெரும்-8 - .. o