பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 பெரும் பெயர் முருகன்

பொருள் உரைப்பர். கந்தபுராணத்தில், முருகவேளின்

திருவுருவத்தைத் தரிசித்த சூரபன்மன் கூறுவதாக ஒரு பாட்டு உண்டு.

ஆயிரம் கோடி காமர்

அழகெலாம் திரண்டொன் ருகி

மேயின எனினும் செவ்வேள்

விமலமாம் சரணந் தன்னில்

தூயநல் எழிலுக் காற்ருது

- என்றி.டின், இனைய தொல்லோன்

மாயிரு வடிவுக் கெல்லாம்

உவமையார் வகுக்க வல்லார் !

ஆயிரங் கோடி மன்மதர்களுடைய அழகு ஒன்று திரண் டாலும், முருகன் திருவடியழகுக்கு ஈடாகாதென்று சூரன் சொல்லுவதாக அமைந்தது இப் பாட்டு. பகைவன்ே இவ்வாறு போற்றுவதால்ை அப் பெருமானுடைய திரு மேனியழகு எப்படி இருக்கவேண்டும்!

மணமும், தெய்வத் தன்மையும், இளமையும், அழகும் ஒருங்கே உடைமையால் முருகன் என்னும் திரு நாமம் செவ்வேளுக்கு அமைந்தது என்ற உண்மையை நக்கீரர் ஓரிடத்தில் குறிப்பாகச் சொல்கிருர். முருகன் தன்னைத் தேடிவந்த புலவனுக்குத் தரிசனம் தந்த ருளுவான் என்று கூறுகிருர் புலவர். இன்ன உருவத்தோடு எழுந்தருளுவான் என்று குறிப்பிடும்போது இந்த நால் வகைப் பண்புகளையும் தெரிவிக்கிருர். -

.பண்டைத்தன் ". . . . . . . - மணம்கமழ் தெய்வத்து இளநலம் காட்டி