பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும் பெயர் முருகன் 5

என்பது அவர் வாக்கு. அவன் புலவனுக்குக் காட்டும் திருக்கோலத்தில் மணம் கமழும்; தெய்வத் தன்மை இலங்கும்; இளமை தவழும்; நலம் ததும்பும். நலம் என்பது அழகு. இறைவன் முருகளுக எழுந்தருளு கிருன்; முருகுடையவகைக் காட்சி தருகிருன்; முருகு என்னும் சொல்லினுல் சிறப்பாகக் குறிக்கப் பெறும் மணம், தெய்வத் தன்மை, இளமை, நலம் என்ற நான்கு பண்புகளேயும் உடையவகை வருகிருன். இந்த முருகத் திருக்கோலம் இறைவனுக்கு இயல்பானது; அநாதி óTQ}táfö இருப்பது. ஆதலின், "பண்டைத்தன்' என்று சிறப்பித்தார். முருகன் என்னும் சொல்லுக்குரிய பொருளே முருகாற்றுப் படையில் உள்ள இந்த அடி புலப்படுத்துகிறது. “. . . . . . . . . .

இந்த நான்குவகை இயல்புகளும் உடையார் பிறர் யாரும் இலராதலின், அவ்வியல்புகளைக் குறிக்கும் இந் நாமம் பிறரால் பெறுவதற்கு அரிதாகவும், முருக னுக்கே அமைந்ததாகவும் ஆயிற்று. பெறலரிய மரபை யுடைய பெரும் பெயர் இது. - -

முருகன் என்னும் சொல்லில் நான்கு எழுத்துக் களே உண்டு. ஒற்றை நீக்கிக் கணக்கிடும் சம்பிர தாயப்படி பார்த்தாலும், விளியாகக் கொண்ட பொழுதும் மூன்று எழுத்துக்களே இத் திருநாமத்தில் உண்டு. மூன்று எழுத்துக்களால் ஆன மந்திரம் போன்றது. முருக என்னும் சொல். எழுத்துக்கள் மூன்றே ஆன இத்திருநாமம் பெரும் பெயர் என்று கூறுவதற்கு ஏற்றதா? சிறிய திருநாமம் அல்லவா இது? ஐந்தெழுத்து, ஆறெழுத்து, பன்னிரெழுத்து என்றெல் லாம் பேசும் மந்திரங்களும் திருநாமங்களும். இருக்க