பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 . பெரும் பெயர் முருகன்

இந்த மூன்றெழுத்துப் பெயரைப் பெரும் பெயர் என்று சொல்லலாமா?-இவ் விஷயத்தைச் சற்றுப் பார்க்கலாம்.

பெரும் பெயர் என்பதிலுள்ள பெருமை எழுத்துப் பெருக்கத்தைக் குறிப்பிடவில்லை. உருவினுற் சிறியனே லும் அகத்தியன் பெரு முனிவரன் ஆன்ை. அதுபோல். பொருட் பெருமையால் இது பெரிய பெயராயிற்று. அன்றியும் நால்வகையான பொருளைக் குறித்து, நால்: வேறு பெயர்களால் அழைப்பதற்குச் சமானமாக அமைவதனால் இந் நாமம் ஒன்றில் நான்கு அடங்கிய தாகிறது; அதற்கு மேலும் அடங்கியதாகவும் கொள்ள லாம். ஒரு பெயரே பல பெயராக விரிவதற்கு உரிய தென்ருல் அது பெரும் பெயர் என்பதற்கு ஏற்றதே, அன்ருே? . .

அதனால்தான் அதனை ஒருமுறை கூறிலுைம் பெரும் பயன் கிடைக்கும் என்று பெரியோர் கூறினர்.

அஞ்சு முகந்தோன்றின் ஆறு முகந்தோன்றும் . வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்.நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்

முருகாஎன் ருேதுவார் முன். - (பழம் பாடல்.) முருகா எனஓர் தரமோ தடியார் . - முடிமீ திருதாள்-புனைவோனே! (திருப்புகழ்)

ஒரு பெயரானலும் முருகா என்னும் திருநாமம் பல திருநாமங்களாகவே கொள்வதற்குரியது. . .

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள், மெய்ம்மைகுன்ற மொழிக்குத் துணைமுரு காஎனும்

நாமங்கள் ...'. . . . . . . . . . * * .