பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும் பெயர் முருகன் 7

என்பது கந்தரலங்காரம். 'முருகா எனும் நாமங்கள்' என்று அருணகிரிநாதர் கூறுகிருர். முருகா என்ற ஒரு நாமத்தையே நாமங்கள் என்ருர், பல பொருள்களில் வரும்போது அது பல சொற்களாகவே எண்ணுதற்கு உரியது. பல நாமங்களுக்குரிய பொருளும் பயனும் உடையது. ஆதலால் பன்மையாற் கூறினர். இத் தகைய சிறப்பை யெல்லாம் உடையது முருக என்னும் நாமம். ஆகவேதான் நக்கீரர், அரும்பெறல் மரபிற் பெரும் பெயர் முருக’’ என்று கூறுகிரு.ர்.